Vi அட்டகாச ரீசார்ஜ் திட்டங்கள்: நாளொன்றுக்கு ரூ.9-க்கும் குறைவாக செலவிட்டால் போதும்!!

தற்போது, தொலைத் தொடர்பு சந்தையில் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க நிறுவனங்கள் தினசரி புதிய திட்டங்களை கொண்டு வருகின்றன. வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் அதிகபட்ச வசதிகளை வழங்கும் நோக்கில் இந்த திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.
புதுடெல்லி: தற்போது, தொலைத் தொடர்பு சந்தையில் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க நிறுவனங்கள் தினசரி புதிய திட்டங்களை கொண்டு வருகின்றன. வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் அதிகபட்ச வசதிகளை வழங்கும் நோக்கில் இந்த திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. இவற்றில் தரவு, அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றின் கலவை வழங்கப்படுகிறது.
வோடபோன் ஐடியா நிறுவனமும் (Vi) தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சலுகைகளை கொண்டு வந்துள்ளது. இந்த சலுகைகள் மிகவும் மலிவானவை. இவை வாடிக்கையாளர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்கின்றன. மேலும், இந்த திட்டத்தைப் பெற வாடிக்கையாளர்கள் தினமும் ரூ .10, ரூ .13 மற்றும் ரூ .7 மட்டுமே செலவிட்டால் போதும்.
வோடபோன்-ஐடியா ரூ.398 திட்டம்
இந்த திட்டத்தில், தினமும் 3 ஜிபி தரவு கிடைக்கும். இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதில் வரம்பற்ற அழைப்புகளின் நன்மையும் உள்ளது. இதன் மூலம் நீங்கள் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வசதியையும் பெறுவீர்கள். Vi திரைப்படங்கள் மற்றும் டிவி-க்கான அணுகலும் கூடுதல் நன்மையாக கிடைக்கும். இந்த திட்டத்திற்கு நீங்கள் தினமும் ரூ .14.21 செலவிடுவீர்கள்.
ALSO READ: Jio Prepaid Plan: ரூ.100-க்கும் குறைவான விலையில் எக்கச்சக்க நன்மைகள்
ரூ .401 திட்டம்
வோடபோன் ஐடியாவின் இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் கால அளவு 28 நாட்களாகும். இதில் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவுடன் (Data) 16 ஜிபி கூடுதல் டேட்டாவும் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்-சுக்கான நன்மையும் கிடைக்கும். ஜியோவின் திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகளுக்கான நன்மையும் கிடைக்கிறது. செயலிகளில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், வி மூவிஸ் ஆகியவற்றின் 1 வருடத்திற்கான அணுகலைப் பெறலாம். இந்த திட்டத்திற்கு, நீங்கள் தினமும் ரூ .14.31 செலவிட வேண்டி இருக்கும்.
ரூ 249 திட்டம்
வோடபோன் ஐடியாவின் ரூ .249 திட்டத்தில் (Recharge Plan), தினமும் 1.5 ஜிபி தரவு கிடைக்கிறது. இந்த திட்டத்தின் விலை தினசரி அடிப்படையில் பிரிக்கப்பட்டால், அது ஒரு நாளைக்கு ரூ .8.89 என வரும். இந்த திட்டத்தில் வரம்பற்ற வாய்ஸ் காலிங் கிடைக்கிறது. இது தவிர, இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வசதியும் கிடைக்கிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR