Vi, Jio, Airtel வழங்கும் ₹200 குறைவான அசத்தல் ரீசார்ஜ் திட்டங்கள்

இணையத்தின் பயன்பாடு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, வாடிக்கையாளர்களை கவர தொலைத் தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சூப்பர்  ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகின்றன. Vi, Jio மற்றும் Airtel  அசத்தல் ரீசார்ஜ் திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 20, 2021, 12:13 PM IST

Trending Photos

Vi, Jio, Airtel வழங்கும் ₹200 குறைவான அசத்தல் ரீசார்ஜ் திட்டங்கள் title=

இணையத்தின் பயன்பாடு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, வாடிக்கையாளர்களை கவர தொலைத் தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சூப்பர்  ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகின்றன. Vi, Jio மற்றும் Airtel  அசத்தல் ரீசார்ஜ் திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

வோடபோன்-ஐடியா, ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகியவற்றின் பல சிறந்த திட்டங்களில் 200 ரூபாய்க்கும் குறைவான ரிசார்ஜ் திட்டங்களில் உங்களுக்கு வேண்டிய அனைத்தும் கிடைக்கும். இந்த திட்டங்களின் செல்லுபடியாகும் காலம் 20 நாட்கள். இதனுடன், வரம்பற்ற அழைப்பு மற்றும் தினசரி தரவு ஆகியவற்றுடன் பல செயலிகளை பயன்படுத்துவதற்கான இலவச சந்தாவும் கிடைக்கும். 

ALSO READ | இந்த 1 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், நீங்களும் பணக்காரர் ஆகலாம்

வோடபோன் ஐடியாவின் ₹169 ரீசார்ஜ் - இந்நிறுவனம் தனது பயனர்களுக்கு 169 ரூபாயில் சிறந்த திட்டத்தை வழங்குகிறது. இது 20 நாட்கள் செல்லுபடியாகும், வரம்பற்ற அழைப்பு வசதி இருக்கும். இந்த திட்டத்தில் தினசரி 1 ஜிபி தரவு மற்றும் 100 எஸ்எம்எஸ் உங்களுஇக்கு கிடைக்கும். இதனுடன், வோடபோன் ப்ளே (Vodafone Play) மற்றும் ஜீ 5 (Zee5 ) இலவச சந்தாக்களும் கிடைக்கும்.
ஏர்டெல்லின் 199 ரீசார்ஜ்- ஏர்டெல்லின்  199 ரூபாய்க்கான ரீசார்ஜ் திட்டத்தில், 24 நாட்கள் வாலிடிட்டியுடன், வரம்பற்ற அழைப்பு வசதியைப் பெறலாம். இந்த திட்டத்தில் தினசரி 1 ஜிபி தரவு, 100 எஸ்எம்எஸ் மற்றும் இலவச ஹலோ ட்யூன்ஸ், Airtel Xstream, Wynk Music, மற்றும் Zee5 பிரீமியம் இலவச சந்தா ஆகியவை கிடைக்கும்.

ஜியோவின் 149 ரீசார்ஜ் - ஜியோவின் ரூ .149 ரீசார்ஜ் திட்டம் 24 நாட்கள் வாலிடிடி கொண்டது. இதில், தினசரி 1 ஜிபி டேட்டா, ஜியோ நெட்வொர்க்கில் வரம்பற்ற அழைப்பு மற்றும் பிற நெட்வொர்க்குகளில் அழைப்புகளுக்கு 300 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. உங்கள் தினசரி தரவு முடிந்த பிறகு, இணையத்தின் வேகம் 64Kbps ஆகக் குறையும். இந்த திட்டத்தில், ஜியோ செயலிகளுக்கான இலவச சந்தா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை உண்டு.

ALSO READ | இந்தியாவில் விரைவில் 5G தொழில்நுட்பம்; ஆனால், சீனாவுக்கு ஏமாற்றம்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News