COVID-19 நெருக்கடியில் உதவ முன்வந்த Vi: 6 கோடி வாடிக்கையாளர்களுக்கு இலவச ரீசார்ஜ், double talktime

வோடபோன் ஐடியா தனது வாடிக்கையாளர்களுக்கு கோவிட் -19 நிவாரண சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த வருமானம் கொண்ட வோடபோனின் சுமார் 6 கோடி  வாடிக்கையாளர்களுக்கு இதனால் பயன் கிடைக்கும்.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 19, 2021, 04:08 PM IST
  • வோடபோன் ஐடியா தனது வாடிக்கையாளர்களுக்கு கோவிட் -19 நிவாரண சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • வோடபோன் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ .49 பேக்கை இலவசமாக வழங்கும்.
  • முதன்முறையாக ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோபோன் பயனர்களுக்கு 300 நிமிடங்களுக்கான இலவச அழைப்பை வழங்குவதாக அறிவித்தது.
COVID-19 நெருக்கடியில் உதவ முன்வந்த Vi: 6 கோடி வாடிக்கையாளர்களுக்கு இலவச ரீசார்ஜ், double talktime  title=

வோடபோன் ஐடியா தனது வாடிக்கையாளர்களுக்கு கோவிட் -19 நிவாரண சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த வருமானம் கொண்ட வோடபோனின் சுமார் 6 கோடி  வாடிக்கையாளர்களுக்கு இதனால் பயன் கிடைக்கும். இந்த 6 கோடி வாடிக்கையாளர்களுக்கு ரூ .49 ரீசார்ஜ் பேக்கை வோடபோன் இலவசமாக்கியுள்ளது. வோடபோன் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ .49 பேக்கை இலவசமாக வழங்கும்.

Vi இன் ரூ. 49 பேக்கில் ரூ .38 மதிப்பிலான டாக்டைம் கிடைக்கும். இது தவிர, 300 எம்பி டேட்டாவும் இதில் கிடைக்கிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். மற்றொரு தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல்லைப் (Airtel) போலவே வொடபோன் ஐடியாவும் 79 ரூபாய் திட்டத்தின் இரட்டை நன்மைகளை அறிவித்துள்ளது.

Vi ஏர்டெல்லைப் போல இரண்டு சலுகைகளை வழங்கியுள்ளது. கொரோனா தொற்றால் விதிக்கப்பட்ட லாக்டவுன் காரணமாக வேலை இல்லாததால், பணம் கட்டி ரீசார்ஜ் செய்ய முடியாத வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் உதவும். தனது 6 கோடி வாடிக்கையாளர்களுக்கு ரூ .49 இலவச ரீசார்ஜ் கிடைக்கும் என்று Vi செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இந்த சலுகைக்கு நிறுவனம் ரூ .294 கோடியை செலவிடும்.

ALSO READ: COVID-19, உதவ முன்வந்த Airtel: இலவச பேக்குகள், தடுப்பூசி பதிவு, இன்னும் பல சலுகைகள்

ரூ. 79 மதிப்பிலான காம்போ ரீசார்ஜ் திட்டத்தில் ரூ.64 ரூபாய்க்கான டாக்டைம் கிடைக்கிறது. இரட்டை தரவு சலுகையின் கீழ், இதனுடன் 128 ரூபாய்க்கான டாக்டைம், 200 எம்பி தரவு ஆகியவை கிடைக்கின்றன. இவை 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். 

முன்னதாக, ஏர்டெல்லும் இரண்டு சலுகைகலை வழங்கியது. ரூ .49 மற்றும் ரூ .79-க்கான திட்டங்கள் இதில் அடங்கும். ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ரூ .49 இலவச ரீசார்ஜ் கிடைக்கிறது. இது அதன் 5.5 கோடி வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும். அதே நேரத்தில், 79 ரூபாய் திட்டத்துடன் இரட்டை தரவு சலுகை கிடைக்கிறது. ஏர்டெல்லின் திட்டம் குறித்த முழுமையான தகவல்களை இங்கே கிளிக் செய்து பெறலாம்.

முதன்முறையாக ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோபோன் (Jio) பயனர்களுக்கு 300 நிமிடங்களுக்கான இலவச அழைப்பை வழங்குவதாக அறிவித்தது. ஜியோ, இந்த சலுகை தனது அனைத்து ஜியோ தொலைபேசி பயனர்களுக்கும் பயனளிக்கும் என்று கூறியுள்ளது. இந்த சலுகையின் கீழ், ஜியோபோன் வாடிக்கையாளர்கள் இப்போது தினமும் 10 நிமிடங்கள் தங்கள் மொபைலில் இலவசமாக பேச முடியும். நிறுவனம் தினமும் 10 நிமிடங்கள் என்ற விகிதத்தில், மாதத்திற்கு 300 நிமிடங்களுக்கான அவுட்கோயிங்க் கால் வசதியை அளிக்கிறது.

ALSO READ: Vi ரூ.109 ரீசார்ஜ் பிளான்: குறைந்த விலையில் எச்சச்சக்க நன்மைகள், recharge now!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News