ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்திய பிறகு, அதை பின்பற்றிய வோடபோன் ஐடியா நிறுவனம் ஜூலையில் கட்டணங்களை உயர்த்தியது. கட்டண உயர்வுக்கு பிறகு, வோடாபோன் ஐடியா (Vi) வாடிக்கையாளர்கள் அரசுக்குச் சொந்தமான BSNLக்கான போர்ட் அவுட் ஜூலையில் அதிகரித்துள்ளது என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி அக்ஷயா மூந்த்ரா கடந்த செவ்வாய்க்கிழமை ஒப்புக் கொண்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வோடபோன் ஐடியா நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் சுதந்திர தின பரிசு


வோடபோன் நிறுவனத்தில் இருந்து வாடிக்கையாளர்கள் விலகி போவதை தடுக்கும் வகையில், வோடபோன் ஐடியா தனது வாடிக்கையாளர்களுக்கு 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சில சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளது. இந்த சலுகையில், குறிப்பிட்ட சில ரீசார்ஜ் திட்டங்களுக்கு கூடுதல் டேட்டா மற்றும் ஓடிடி நன்மைகள் கிடைக்கும். 


திட்டத்தில் இணைய ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 28 வரை வாய்ப்பு


வோடபோன் நிறுவனத்தின் ஆறு மாத காலம் மற்றும் ஒரு வருட காலத்திற்கான சில குறிப்பிட்ட ரீசார்ஜ் பிளான்களுக்கு நிறுவனம் கூடுதல் டேட்டா மற்றும் OTT நன்மைகளை வழங்குகிறது. வோடபோன் ஐடியாவின் இந்த சலுகை ரூ.1749, ரூ.3499, ரூ.3699 மற்றும் ரூ.3799 ஆகிய ரீசார்ஜ் திட்டங்களுக்கு பொருந்தும். இந்தத் திட்டங்களில் கிடைக்கும் தினசரி டேட்டாவைத் தவிர, வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 30 ஜிபி முதல் 50ஜிபி வரை கூடுதல் டேட்டா கிடைக்கும். அதோடு ஓடிடி நன்மைகளும் கிடைக்கும். இந்த சலுகை திட்டங்களை பெற ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 28 வரை மட்டுமே வாய்ப்பு.


டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ இலவசம்


கூடுதல் டேட்டா தவிர, வோடபோன் ஐடியா ஒரு வருட திட்டத்தில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் வீடியோவின் ஒரு வருட இலவச சந்தாவையும் வழங்குகிறது. வோடபோன் ஐடியா ஆப் மூலம் ரீசார்ஜ் செய்தால், ஓராண்டு திட்டத்தில் அதிக தள்ளுபடி கிடைக்கும். ரூ.3499, ரூ.3699 மற்றும் ரூ.3799 திட்டங்களில் முறையே ரூ.50, ரூ.75 மற்றும் ரூ.100 தள்ளுபடி கிடைக்கும்.


மேலும் படிக்க | மின்னல் வேகத்தில் உங்கள் போனை சார்ஜ் செய்ய... சில டிப்ஸ் இதோ


வோடபோன் ஐடியா வழங்கும் ரூ.1,749 ப்ரீபெய்ட் திட்டம் 


ரீசார்ஜ் திட்டம் செல்லுபடியாகும் காலம்: 180 நாட்கள்
அதிவேக டேட்டா: 1.5ஜிபி/நாள்
கூடுதல் டேட்டா: 45 நாட்களுக்கு கூடுதலாக 30 ஜிபி டேட்டா
தொலைபேசி அழைப்பு: அன்லிமிடெட் காலிங்


வோடபோன் ஐடியா வழங்கும் ரூ.3,499 ப்ரீபெய்ட் திட்டம் 


ரீசார்ஜ் திட்டம் செல்லுபடியாகும் காலம்: 365 நாட்கள்
அதிவேக டேட்டா: 1.5ஜிபி/நாள்
கூடுதல் டேட்டா: 90 நாட்களுக்கு கூடுதலாக 50 ஜிபி டேட்டா
தொலைபேசி அழைப்பு: அன்லிமிடெட் காலிங்


வோடபோன் ஐடியா வழங்கும் ரூ.3,624 ப்ரீபெய்ட் திட்டம் 


ரீசார்ஜ் திட்டம் செல்லுபடியாகும் காலம்: 365 நாட்கள்
அதிவேக டேட்டா: 2 ஜிபி/நாள்
கூடுதல் டேட்டா: 90 நாட்களுக்கு கூடுதலாக 50 ஜிபி டேட்டா
தொலைபேசி அழைப்பு: அன்லிமிடெட் காலிங்
ஓடிடி பயன்கள்: மொபைலில் கண்டு களிக்க டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஒரு வருட இலவச சந்தா


வோடபோன் ஐடியா வழங்கும் ரூ.3,699 ப்ரீபெய்ட் திட்டம் 


ரீசார்ஜ் திட்டம் செல்லுபடியாகும் காலம்: 365 நாட்கள்
அதிவேக டேட்டா: 2ஜிபி/நாள்
கூடுதல் டேட்டா: 90 நாட்களுக்கு கூடுதலாக 50 ஜிபி டேட்டா
தொலைபேசி அழைப்பு: அன்லிமிடெட் காலிங்
ஓடிடி பயன்கள்: மொபைலில் கண்டு களிக்க அமேசான் பிரைம் வீடியோ ஒரு வருட இலவச சந்தா


மேலும் படிக்க | ஸ்மார்ட்போன் நீண்டநாட்களுக்கு ராக்கெட் வேகத்தில் வேலை செய்ய... சில டிப்ஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ