வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி!! நிறுவனம், அதன் போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் வழங்கப்படும் அமேசான் பிரைம் சந்தாவின் செல்லுபடியை குறைத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக, ஏர்டெல் அதன் போஸ்ட்பெய்ட் திட்டத்துடன் வழங்கப்படும் அமேசான் பிரைம் சந்தாவின் செல்லுபடியை மாற்றியது. டெலிகாம்டாக்-இன் செய்திகளின்படி, இப்போது வோடஃபோன் ஐடியாவின் போஸ்ட்பெய்ட் திட்டத்தில் வழங்கப்படும் அமேசன் ப்ரைம் சந்தாவிலும் அதே மாற்றங்களைக் காணலாம். புதிய மாதத்திலிருந்து, பயனர்கள் சில மாற்றங்களைக் காண்பார்கள். அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். 


வோடபோன் ஐடியா போஸ்ட்பெய்ட் பயனர்கள் 6 மாத அமேசான் பிரைம் சந்தாவைப் பெறுவார்கள்


வோடபோன் ஐடியா போஸ்ட்பெய்ட் பயனர்கள் இனி அமேசான் பிரைம் சந்தாவை 1 வருட செல்லுபடியுடன் பெற மாட்டார்கள். மாறாக, இப்போது ஆறு மாதங்களுக்குப் பெறுவார்கள். இந்த மாற்றம் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக தொலைத்தொடர்பு இணையதளம் கூறுகிறது. 


போஸ்ட்பெய்டு திட்டங்களால் வழங்கப்படும் மற்ற கூடுதல் நன்மைகளின் செல்லுபடியாகும் காலத்தில் நிறுவனம் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. தனிப்பட்ட போஸ்ட்பெய்ட் திட்டங்கள், குடும்பத் திட்டங்கள், ரெட்எக்ஸ் திட்டங்கள் என அனைத்திலும் அமேசான் ப்ரைம் சந்தாவின் செல்லுபடியாகும் காலம் ஆறு மாதங்கள் குறைக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | ஒரு வாட்ஸ்அப் கணக்கை பல மொபைல்களில் ஓபன் செய்யலாம் - புதிய அப்டேட் 


அமேசான் பிரைம் சந்தா கட்டணத்தை உயர்த்தியது


அமேசான் சில மாதங்களுக்கு முன் பிரைம் சந்தா கட்டணத்தை உயர்த்தியது. இந்த தளத்தில் ஆண்டுக்கு ரூ.999ல் இருந்து, சந்தா செலுத்துவதற்கான விலை ஆண்டுக்கு ரூ.1,499 ஆக உயர்த்தப்பட்டது. பிரைம் மியூசிக், ப்ரைம் வீடியோ போன்ற பயன்பாடுகளுக்கான அணுகலை அமேசான் பிரைம் பயனர்களுக்கு வழங்குகிறது. 
வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டும் அமேசான் பிரைமின் செல்லுபடியாகும் பலன்களை விலை உயர்வு காரணமாக குறைத்துள்ளன. வோடபோன் ஐடியாவின் பிரீமியம் சலுகையாகக் கருதப்படும் ரெட்எக்ஸ் திட்டம், அமேசான் ப்ரைம்-ஐ ஆறு மாதங்களுக்கு மட்டுமே வழங்குகிறது.


ரிலையன்ஸ் ஜியோ அமேசான் பிரைமை ஒரு வருடத்திற்கு வழங்குகிறது


ரிலையன்ஸ் ஜியோ அதன் ஓராண்டுக்கான திட்டங்களுடன் அமேசான் பிரைம் சந்தாவை இன்னும் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா எடுத்த முடிவுகளுக்குப் பிறகு ஜியோவும் விரைவில் மாற்றங்களைச் செய்யலாம். அனைத்து நிறுவனங்களும் தங்கள் போஸ்ட்பெய்டு திட்டங்களுடன் பல ஓவர்-தி-டாப் (OTT) சந்தாக்களை இன்னும் வழங்குகின்றன.


மேலும் படிக்க| பிரைவசியில் அடுத்த அதிரடி! மொபைல் நம்பர், முகவரியை நீக்க உதவும் கூகுள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR