Airtel vs Jio: ரூ.300க்கும் குறைவான ப்ரீபெய்ட் திட்டத்தில் யாருடையது சிறந்தது

ரீசார்ஜ் செய்வதற்கு முன் ரூ.300க்கும் குறைவான ஜியோ மற்றும் ஏர்டெல் திட்டங்களை ஒப்பிட்டு அதன் முழுமையான விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 21, 2022, 12:41 PM IST
  • ஜியோ ரூ.300க்கு குறைவான விலையில் ஏராளமான திட்டங்களை வழங்குகிறது.
  • ஏர்டெல்லின் மலிவான ப்ரீபெய்ட் திட்டம் ரூ.155 கட்டணத்தில் கிடைக்கிறது.
  • ஜியோ ரூ.149, ரூ.179 மற்றும் ரூ.209 ஆகிய மூன்று திட்டங்களைக் கொண்டுள்ளது.
Airtel vs Jio: ரூ.300க்கும் குறைவான ப்ரீபெய்ட் திட்டத்தில் யாருடையது சிறந்தது title=

ஏர்டெல் vs ஜியோ: நாட்டின் இரண்டு பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களாக ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகின்றன. வாடிக்கையாளர்களை ஈர்க்க ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய இரண்டும் குறைந்த கட்டணத் திட்டங்களைக் கொண்டுள்ளன. 

குறைந்த கட்டணத்தில் அதிக பலன்களை கொடுக்கும் ப்ரீபெய்ட் திட்டங்களே மக்களை ஈர்க்கும் என்பதில் மாற்று கருத்து ஏதும் இருக்க முடியாது. எனவே மக்கள் தேவையை மனதில் வைத்து, ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவற்றின் ரூ.300க்கு கீழ் உள்ள திட்டங்கள் கொண்டு வந்துள்ளன. 

ரீசார்ஜ் செய்வதற்கு முன் ரூ.300க்கும் குறைவான ஜியோ மற்றும் ஏர்டெல் திட்டங்களை ஒப்பிட்டு அதன் முழுமையான விபரங்களை அறிந்து கொள்ளலாம். 

மேலும் படிக்க | Redmi 10A Launch: ரூ.10,000-க்கும் குறைவான விலை, அசத்தும் அம்சங்கள், அறிமுக தேதி இதோ

ஏர்டெல்லின் குறைந்த கட்டண திட்டங்கள்

ஏர்டெல்லின் மலிவான ப்ரீபெய்ட் திட்டம் ரூ.155 கட்டணத்தில் வருகிறது. இதில் பயனர்களுக்கு 1ஜிபி டேட்டா உடன் 24 நாட்கள் செல்லுபடியாகும் காலத்திற்கானது. இதேபோல், ஏர்டெல் ரூ.179 ப்ரீபெய்ட் திட்டத்தையும் ஏர்டெல் வழங்குகிறது. இது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. 

பட்டியலில் அடுத்ததாக சில ஒரு நாளுக்கு 1GB என்ற வகையிலான தினசரி டேட்டா திட்டங்கள் உள்ளன. ஏர்டெல் ரூ.209 விலையில் ப்ரீபெய்ட் திட்டத்தில், 21 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது. அடுத்தது ரூ.239 திட்டத்தில் மொத்தம் 24 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஏர்டெலின் ரூ.265 கட்டணத்திலான திட்டத்தில் உள்ளது நால் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா திட்டம். இது 28 நாட்களுக்கான திட்டம்.

இவை தவிர, ஏர்டெல் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்கு ரூ.299 விலையில் வழங்குகிறது. தொலைத்தொடர்பு நிறுவனம் ரூ.296 கட்டணத்திலான ப்ரீபெய்ட் திட்டத்தையும் வழங்குகிறது. இதில் 28 நாட்களுக்கு 25ஜிபி டேட்டா கிடைக்கும். மேலே உள்ள அனைத்து திட்டங்களும் அமேசான் பிரைம் வீடியோவின் மொபைல் பதிப்பின் இலவச ட்ரயல் சலுகையுடன் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் நாள் ஒன்றுக்கு 100 SMS ஆகியவை கிடைக்கும்.

ஜியோவின் குறைந்த கட்டண திட்டங்கள்

ஜியோ ரூ.300க்கு குறைவான கட்டணத்தில் ஏராளமான திட்டங்களை வழங்குகிறது. Jio 20-நாள், 24-நாள் மற்றும் 28-நாள்களுடன் வரும் ரூ.149, ரூ.179 மற்றும் ரூ.209 ஆகிய மூன்று பிரீபெய்ட் திட்டங்களும் நாள் ஒன்றுக்கு 1ஜிபி வழங்கும் திட்டமாகும். ஜியோ ரூ.119, ரூ.199, ரூ.239 மற்றும் ரூ.259 ஆகிய நான்கு 1.5ஜிபி தினசரி டேட்டா ப்ரீபெய்ட் திட்டங்களையும் வழங்குகிறது.

இவை முறையே 14 நாள், 23 நாள், 28 நாள் மற்றும் 1 மாத வேலிடிட்டியுடன் வருகிறது. கூடுதலாக, ஜியோ நாள் ஒன்றுக்கு 2ஜிபி என்ற வகையிலான ரூ.249 மற்றும் ரூ.299 கட்டணங்களில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது, அவை முறையே 23 நாட்கள் மற்றும் 28 நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்களாகும்.

மேலும் படிக்க | பாதிக்கும் குறைவான விலையில் ஐபோன் 13 வாங்க அரிய வாய்ப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News