எச்சரிக்கை: இந்த மெசேஜ் வந்தால் ஓப்பன் செய்ய வேண்டாம்!

ஆன்லைன் கல்விக்காக அரசாங்கம் 100 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக டேட்டா வழங்குவதாக சில போலியான செய்திகள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றன.
சமூக வலைத்தளங்களில் சில நல்லவிதமான தகவல்கள் பகிரப்பட்டு வந்தாலும் பல போலியான தகவல்களும் பகிரப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக இலவசமாக டேட்டா வழங்குவதாக சில போலி செய்திகள் இணையங்களில் உலா வந்து கொண்டு வருகின்றனர். இதுபோன்ற மோசடிகளை நம்பி வாடிக்கையாளர்கள் ஏமாந்துவிடாமல் இருக்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மக்களுக்கு ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளது. ஆன்லைன் கல்விக்காக அரசாங்கம் இலவச டேட்டாக்களை வழங்குவதை சில போலியான செய்திகள் இணையத்தில் பரவி வருகின்றன, அதில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை நீங்கள் க்ளிக் செய்தால் உங்களது ரகசிய தகவல்கள் திருடப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | பிளே ஸ்டோரில் இல்லாத ஆப்ஸ்களை டவுன்லோட் செய்வது எப்படி
இதுகுறித்து செல்லுலார் ஆபரேட்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (சிஓஏஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சமூக வலைதளங்களில் மோசடி செய்யும் நோக்கத்தில் போலியான செய்திகள் பரப்பப்படுவது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது' என்று கூறியுள்ளது. மேலும் கூறுகையில், 100 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் கல்வி பயில ஏதுவாக இலவச ரீசார்ஜ் திட்டத்தை பெற இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள் என்று போலியான செய்து வருகிறது இதனை நம்பவேண்டாம் என்று கூறியுள்ளது.
உங்களது கணினி அல்லது ஸ்மார்ட்போனில் எவ்வித லிங்கையும் கிளிக் செய்ய வேண்டாம், அது உங்களது ரகசிய தகவல்களை திருடிவிடும் என்று வாடிக்கையாளர்களை சிஓஏஐ வலியுறுத்தி இருக்கிறது. மேலும் பொதுமக்கள் தேவையில்லாமல் ஏதேனும் செய்திகளை பெற்றால் லிங்கை க்ளிக் செய்ய வேண்டாம், அது பல்வேறு விதமான கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று கூறியுள்ளது. மேலும் இதுபோன்ற செய்திகள் வந்தால் நண்பர்கள் அல்லது உறவினர்கள் எவருக்கும் அனுப்பாமல் இருக்க வலியுறுத்துகிறது.
மேலும் படிக்க | வாட்ஸ் அப் பேமெண்டில் நடக்கும் நூதன மோசடி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR