இண்டர்நெட் உலகில் பாதுகாப்பு அம்சங்கள் என்பது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஹேக்கிங் மற்றும் ஹேக்கர்கள் கண்டுபிடிக்கும் புதிய டெக்னிக்குகள் வெளி உலகுக்கு தெரிந்த பிறகுதான், அதற்கான பாதுகாப்பு அம்சங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு அதில் இருந்து தப்பிக்க புதிய டெக்னாலஜி கண்டுபிடிக்கப்படுகிறது. அப்படி பார்க்கும்போது திருடர்கள் நுழைந்த பிறகு தான் மீண்டும் திருடர்கள் நுழையாமல் இருக்க என்ன வழி? என்று யோசிக்கும் நிலையில் தான் இன்றைய டெக் உலகம் இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Twitter Aims High: மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்து முன்னேறும் டிவிட்டர்


அந்தவகையில் வாட்ஸ்அப் ஹேக்கிங்கை புதிய முறையில் ஹேக்கர்கள் செய்து வருகிறார்கள். அவர்கள் விரிக்கும் வலையில் நீங்கள் விழுந்தால் அடுத்த நொடி, உங்கள் வாட்ஸ்அப் அவர்களின் கட்டுப்பாட்டுக்கு சென்றுவிடும். இது குறித்து cloudsek.com இணைய நிறுவனர் ராகுல் சசி தனது ட்விட்டர் பக்கத்தில் தெளிவாக கூறியிருக்கிறார். அவரின் இந்த பதிவுக்குப் பிறகு தான்,  பலருக்கும் வாட்ஸ்அப் ஹேக்கிங் பற்றிய புதிய விழிப்புணர்வு கிடைத்துள்ளது. 


ஹேக்கர்கள், குறிப்பிட்ட எண்களுக்கு அழைத்து பரிசு மற்றும் ஆஃபர் என்ற ஆசைக் காட்டுகிறார்கள். இந்த வலையில் விழும் நபர்களை குறிப்பிட்ட எண்ணுக்கு மீண்டும் அழைக்க வைக்கிறார்கள். **67*<10 இலக்க தொலைபேசி எண்>, *405*<10 இலக்க தொலைபேசி எண்> எண்களுக்கு அழைக்க தூண்டுவார்கள். இந்த வலையில் விழுந்து நீங்கள் அழைப்பை மேற்கொள்ளும்போது, வாட்ஸ்அப் அவர்கள் கட்டுப்பாட்டுக்கு சென்றுவிடும். ஹேக்கர்கள் கொடுக்கும் அந்த இரண்டு எண்களும் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனத்தின் கால் பார்வேடிங் கோரிக்கை வைக்கும் எண்கள். அந்த எண்களை டைப் செய்து கோரிக்கை விடுக்கும்போது, இன்னொரு எண்ணுக்கு அழைப்புகள் செல்லும்.



இந்த இடத்தில் தான் அவர்களது மோசடியை அரங்கேற்றுவார்கள். அதாவது உங்களுக்கே தெரியாமல் கால் பார்வேடிங்கை அவர்களது மொபைலுக்கு செல்லுமாறு செட் செய்துவிடுவார்கள். பேக்கெண்டில் உங்கள் எண்ணுக்கான வாட்ஸ்அப் ரெஜிஸ்ட்ரேசன் செய்து, அழைப்பு மூலம் ஓடிபியை பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்வார்கள். உங்கள் மொபைல் பிஸியாக இருந்தால் அல்லது மொபைல் ஸ்விட் ஆப் நிலையில் இருக்கும்போது அந்த அழைப்பு அவர்களுக்கு சென்று அதன் மூலம் ஓடிபியை பெறுவார்கள். பின்னர், உங்கள் வாட்ஸ் அப், அவர்களது கட்டுப்பாட்டுக்கு சென்றுவிடும்.


மேலும் படிக்க | 2024 முதல் USB Cஐப் பயன்படுத்தும் ஆப்பிள் ஐபோன் மற்றும் ஏர்போட்கள்


இந்த விஷயத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க  வேண்டும். கால்பார்வேடிங் மூலம் நடக்கும் வாட்ஸ்அப் ஹேக்கிங் மோசடி பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர். உங்களுக்கு தெரியாமலேயே இந்த மோசடியை அரங்கேற்றிவிடுவார்கள். 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR