Twitter Aims High: மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்து முன்னேறும் டிவிட்டர்

Target of Twitter: அசுர இலக்கு நிர்ணயித்து முன்னேறும் டிவிட்டரின் ரகசிய பயனர் இலக்கு தொடர்பான தகவல்கள் கசிந்தன

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 8, 2022, 06:37 AM IST
  • Target of Twitter: அசுர இலக்கு நிர்ணயித்து முன்னேறும் டிவிட்டரின் ரகசிய பயனர் இலக்கு தொடர்பான தகவல்கள் கசிந்தன
Twitter Aims High: மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்து முன்னேறும் டிவிட்டர் title=

புதுடெல்லி: மைக்ரோ பிளாக்கிங் தளம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான ட்விட்டரின் இலக்கு குறித்த லட்சியம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பயனர்களை பன்மடங்கு அதிகரிக்க வேண்டும் என்ற அரசு லட்சியத்துடன் ட்விட்டர் செயல்பட்டு வருவதாக தெரிகிறது.

ட்விட்டர் ஊழியர்களிடன் இருந்து கசிந்த ரகசிய தகவல்களில் இருந்து டிவிட்டரின் பயனர்கள் அதிகரிப்பு என்ற லட்சியம் வெளியானது.  

மைக்ரோ பிளாக்கிங் தளம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான ட்விட்டர், எலோன் மஸ்க் உடனான ஒப்பந்தம் இதுவரை பரிபூர்ணமாக நிறைவேறாவிட்டாலும்  பயனர் வளர்ச்சியின் லட்சிய இலக்கை நோக்கி செயல்பட்டு வருவதாக தெரிகிறது. 

டிவிட்டர் நிறுவனத்தின் கலந்தாலோசனைக்ள் கூட்டத்தில், நுகர்வோர் தயாரிப்புகள் பிரிவு ஊழியர்களிடம் நிறுவனம் தனது பணமாக்கக்கூடிய தினசரி செயலில் உள்ள பயனர்களை இந்த காலாண்டில் 13 மில்லியனாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ட்விட்டர் உயர்நிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | விளம்பரம் கொடுப்பவர்களின் சக்தியை ஏன் முன்னிலைப்படுத்த வேண்டும்: எலோன் மஸ்க்
 
டிவிட்டரின் நுகர்வோர் தயாரிப்புகள் பிரிவு, டிவிட்டர் தளத்தில் விளம்பரங்களை பார்க்கும் பயனர்களை இலக்காக கொண்டு செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

அணி இதுவரை நிர்ணயித்த இலக்குகளிலே இதுதான் மிகவும் அதிகமான இலக்கு என்று ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவதற்கான பாதையில் ட்விட்டர் சென்றுக் கொண்டிருருப்பதாகவும், தற்போது 8.5 மில்லியன் பயனர் வளர்ச்சியை எட்டியுள்ளது என்றும் கூறப்படுகிறது. இது இன்றுவரையிலான காலாண்டு வளர்ச்சிகளில் சிறந்த ஒன்று  என்றும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்த தகவல் வெளியானதும், பங்கு வர்த்தகத்தில் ட்விட்டரின் பங்குகள் 1% உயர்ந்தன.

மேலும் படிக்க | Taflon coating: காரில் டெஃப்ளான் கோட்டிங் உண்மையில் நன்மை பயக்குமா

எலோன் மஸ்க் ட்விட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க முன்வந்துள்ளார், ஆனால் சமூக ஊடக தளத்தில் ஸ்பேம் மற்றும் போலி கணக்குகளின் விகிதத்தை சுயாதீனமாக சரிபார்க்கும் தரவுகளை ட்விட்டர் வழங்கவில்லை என்றால் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அவர் எச்சரித்துள்ளார்.

இந்த விஷயம் கடந்த சில மாதங்களாகவே பெரிய அளவில் பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது டிவிட்டரின் அதிரடி இலக்கும் வளர்ச்சியும், டிவிட்டரின் அசுர இலக்கும் வேறு சில விஷயங்களை குறிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் காலாண்டு பணமாக்கக்கூடிய தினசரி செயலில் உள்ள பயனர்களில் 5% க்கும் குறைவானவர்களே என்று ஏற்கனவே கூறியுள்ளது.

இந்த விஷயத்தை சரிபார்க்க கேள்விகள் கேட்டபட்டதற்கு கருத்து தெரிவிக்க அதை ட்விட்டரின் செய்தித் தொடர்பாளர் மறுத்துவிட்டார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | டிவிட்டரை மொத்தமாக வாங்க தயாராகும் எலான் மஸ்க்

கொரோனா தொற்றுநோய் பரவிய தொடக்கக் காலகட்டத்தில் செய்திகளைப் பெற பயனர்கள் டிவிட்டரை அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கினார்கள். 

இதனால், 2020 இன் இரண்டாம் காலாண்டில் ட்விட்டரில் 20 மில்லியன் பயனர்கள் இணைந்தனர். இது 2019க்கு பிறகு ட்விட்டரின் அதிகபட்ச காலாண்டு தொடர்ச்சியான வளர்ச்சியாகும்.

தற்போது ட்விட்டரின் இலக்கு 13 மில்லியன் பயனர் அதிகரிப்பு என்பது உள் இலக்காக இருக்கும் நிலையில், இது சர்வதேச பங்குச்சந்தை எதிர்பார்ப்புகளை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

எலோன் மஸ்க் உடனான ஒப்பந்தம் நிச்சயமற்றதாக இருந்தாலும், பயனர் வளர்ச்சியின் லட்சிய இலக்கை நோக்கி டிவிட்டர் இலக்கு நிர்ணயித்துள்ளது.

மேலும் படிக்க | புதிய சோஷியல் மீடியா தளத்தை தொடங்குகிறாரா எலான் மஸ்க்? அவரே கூறிய பதில்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News