Whatsapp புதிய அம்சம்: இனி இதை ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாது, பாதுகாப்பு பலமானது
WhatsApp new feature:வாட்ஸ்அப் தனது வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய அப்டேட்டை கொண்டு வருகிறது. இந்த புதிய அம்சத்துக்காக பயனர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்அப் புதிய அம்சம்: சேட்டிங் தளமான வாட்ஸ்அப் தனது வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய அப்டேட்டை கொண்டு வருகிறது. இந்த புதிய அம்சத்துக்காக பயனர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. iOS இல் பீட்டா சோதனைக்குப் பிறகு, வாட்ஸ்அப் இப்போது அதன் ஆண்ட்ராய்டு பீட்டாவில் ஸ்கிரீன் ஷாட்களை எடுப்பதைத் தடுக்கிறது. மெட்டாவின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் சமீபத்தில் மூன்று புதிய தனியுரிமை அம்சங்களை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தார். இதன் மூலம் பயனர்களுக்கு தங்களது சேட்டிங்கில் அதிக கட்டுப்பாடுகளை அளிப்பதோடு, மெசேஜ்களை அனுப்பும்போது அதிக பாதுகாப்பையும் வழங்கும்.
இந்த புதிய அம்சத்தின் விவரம் என்ன?
வாட்ஸ்அப்பில் உள்ள ஸ்கிரீன்ஷாட் பிளாக் அம்சம், iOS க்காக பீட்டாவில் உருவாக்கப்படும் அம்சங்களில் ஒன்றாகும். இந்த அம்சத்தில், யூசர் வியூ ஒன்ஸ்ஸின் கீழ் (View Once) அனுப்பப்படும் படத்தை ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாது.
மேலும் படிக்க | ஸ்மார்ட்போன் மார்க்கெட்டை உலுக்கப்போகும் ஐபோன் 14; வெளியீட்டு தேதி இதுதான்
ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாது
வியூ ஒன்ஸ் போட்டோ மற்றும் வீடியோவைப் பார்த்த பிறகு, ஒரு பயனர் ஸ்கிரீன் ஷாட்டை எடுக்க முயற்சித்தால், ஸ்கிரீன் ஷாட் தானாகவே நின்றுவிடும். இருப்பினும், செய்தியை அனுப்பியவருக்கு இது பற்றிய எந்த அறிவிப்பும் வராது. இருப்பினும், பயனர் விரும்பினால், மற்றொரு கேமரா மூலம் இதை புகைப்படம் எடுக்கலாம்.
டெஸ்க்டாப் பயனர்களுக்காக புதிய அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது
சமீபத்தில் வாட்ஸ்அப் அதன் டெஸ்க்டாப் பயனர்களுக்கு வசதியான அம்சத்தை அறிமுகப்படுத்தியது. டெஸ்க்டாப் பயனர்களுக்காக வாட்ஸ்அப் ஒரு நேடிவ் பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. அவர்கள் அருகில் தொலைபேசி இல்லை என்றால், அவர்கள் தங்கள் டெஸ்க்டாப்பில் வாட்ஸ்அப்பை மீண்டும் மீண்டும் இணைக்க வேண்டியதில்லை. (Windows native app) பயனர்கள் புதிய அப்டேட்டின் கீழ் சேட் செய்வதுடன் கால்களையும் அட்டெண்ட் செய்யலாம்.
இந்த அம்சத்தை எப்படி பயன்படுத்துவது
- முதலில் உங்கள் போனில் வாட்ஸ்அப்பை திறக்கவும்
- இப்போது ஆண்ட்ராய்டு அல்லது ஐபோன் அமைப்புகளின் 'More Options’ என்பதற்குச் செல்லவும்
- இங்கே Linked Devices என்பதை டேப் செய்யவும்.
- இப்போது வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பயன்பாட்டில் உள்ள QR குறியீட்டிற்கு ஃபோனின் கேமராவை நகர்த்தவும்
- அதன் பிறகு உங்கள் வாட்ஸ்அப் இணைப்பு எப்போதும் துண்டிக்கப்படாது.
மேலும் படிக்க | ஸ்மார்ட் எல்இடி டிவியில் பெரும் தள்ளுபடி, வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ