ஸ்மார்ட்போன் மார்க்கெட்டை உலுக்கப்போகும் ஐபோன் 14; வெளியீட்டு தேதி இதுதான்

நீண்ட காலமாக ஸ்மார்ட்போன் மார்கெட்டில் எதிர்பார்க்கப்படும் ஐபோன் 14 வெளியீட்டு தேதி வெளியாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 18, 2022, 07:43 PM IST
ஸ்மார்ட்போன் மார்க்கெட்டை உலுக்கப்போகும் ஐபோன் 14; வெளியீட்டு தேதி இதுதான் title=

iPhone 14 Launch Date; ஐபோன் 14 ஸ்மார்ட்போன் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வெளியீடு குறித்து பல தகவல்களும் அவ்வப்போது வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. இப்போது ஐபோன் 14 இன் வெளியீட்டு தேதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதை பற்றி தெரிந்து கொள்வோம்

உலகின் மிகவும் பிரீமியம் ஸ்மார்ட்போன் பிராண்டான Apple-ன் அனைத்து தயாரிப்புகளும் உலகம் முழுவதும் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் ஸ்மார்ட்போன் தொடரின் வெளியீட்டு தேதி (ஐபோன் 14 வெளியீட்டு தேதி) மற்றும் விலை (ஐபோன் 14 விலை) குறித்து பல தகவல்கள் வந்துள்ளன. ஐபோன் 14 சீரிஸ் எந்த நாளில் வெளியிடப்படும் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

iPhone 14 வெளியீட்டுத் தேதி

ஐபோன் 14 செப்டம்பரில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இதுவரை பல்வேறு யூகங்கள் வெளியான நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ தேதியை குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி ஐபோன் 14 செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாம். ப்ளூம்பெர்க்கின் மார்க் குர்மன் இந்த தகவலை தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | அலர்ட்! மறந்து கூட இந்த இடங்களில் இருந்து ஐபோன் வாங்காதீர்கள்

இந்தியாவில் iPhone 14 விலை

சில அறிக்கைகளின்படி, iPhone 14-ன் விலை iPhone 13 ஐ விட 10 ஆயிரம் ரூபாய் அதிகமாக இருக்கலாம். iPhone 14-ன் அடிப்படை மாதிரி iPhone 13 ஐப் போலவே இருக்கும். புதிய iPhone 14 Max -ன் விலை $ 899 (சுமார் ரூ. 68,500) இலிருந்து தொடங்கும். சிறந்த மாடலான iPhone 14 Pro Max -ன் விலை $1,199 (சுமார் ரூ.91,400)-ல் தொடங்கும். ஐபோன் 14 தொடரில் iPhone 14, iPhone 14 Max, iPhone 14 Pro மற்றும் iPhone 14 Pro Max ஆகிய நான்கு மாடல்களும் அறிமுகப்படுத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | OPPO K10 5G -க்கு மெகா தள்ளுபடி: பிளிப்கார்ட்டில் முந்துங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News