அண்மையில் அறிமுகமான ஐபோன் 16 தொடர் நான்கு வகைகளில் வருகிறது. இந்த நான்கிலும் எது சிறந்தது, நான்கிற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. எது என்ன விலை என ஆப்பிளின் புதிய மாடல் ஐபோன்கள் பற்றிய தகவல்களைத் தெரிந்துக் கொள்வோம். செப்டம்பர் 9ம் தேதியன்று அறிமுகமான ஐபோன், தற்போது முன்பதிவு செய்தவர்களுக்கு கிடைக்கிறது. வழக்கமான விற்பனை செப்டம்பர் 20 முதல் தொடங்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீங்களும் ஆப்பிளின் புதிய போன் வாங்க திட்டமிட்டிருந்தால், நான்கு மாடல்களில் எந்த மாடல் வாங்க வேண்டும் என்பதை முடிவு செய்ய இந்தக் கட்டுரை உதவும். வாங்காவிட்டால் என்ன? தகவல் தெரிந்து கொள்வது நல்லது தானே?


ஐபோன் 16 சீரிஸ்


iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro மற்றும் iPhone 16 Pro Max என புதிதாய் அறிமுகானநான்கு வகை ஐபோன்களில், ஐபோன் 16 இன் அடிப்படை மாடல் ரூ.79,900 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 16 ப்ரோ மேக்ஸின் அடிப்படை விலை ரூ.1,44,900 ஆகும்.  


நான்கு மாடல்களிலும் வித்தியாசம் என்ன?


ஐபோன் 16 தொடரின் ஐபோன் 16 சிறியது, 6.1 அங்குல திரை கொண்டது. ஐபோன் 16 ப்ரோ 6.3 இன்ச் திரையுடன் வருகிறது. ஐபோன் 16 பிளஸ் 6.7 அங்குல திரை மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 6.9 அங்குல திரையை கொண்டுள்ளது, இது இதுவரை இல்லாத மிகப்பெரிய ஐபோன் ஆகும். ஐபோன் 16 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸைச் சுற்றியுள்ள பெசல்களும் மிகவும் மெல்லியதாக உள்ளன, இது அதிக பிரீமியம் தோற்றத்தையும் உணர்வையும் வழங்குகிறது.  


ஐபோன் 16 தொடரில் திரை அளவு மட்டுமே மாறுபடுகிறது. முந்தைய தலைமுறை மாடல்களைப் போலவே, ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸுக்கு 120 ஹெர்ட்ஸ் உயர்-புதுப்பிப்பு-விகித பேனல்கள் உள்ளன. வழக்கமான ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் 60 ஹெர்ட்ஸ் திரைகளுடன் வருகின்றன.  


மேலும் படிக்க | செப்டம்பரில் அறிமுகமாகவிருக்கும் புதிய ஐபோன் எப்படி இருக்கும்? கசிந்த தரவுகள்!


சிப்


ஐபோன் 16 தொடரை இயக்கும் ஏ18 சிப் மற்றும் ஐபோன் 16 ப்ரோ தொடரில் ஏ18 ப்ரோ சிப் ஆகியவை டிஎஸ்எம்சியின் இரண்டாம் தலைமுறை 3என்எம் செயல்முறையைக் கொண்டுள்ளன. போன்கள் நான்குமே, ஆறு-கோர் சிபியு யூனிட் நான்கு உயர் செயல்திறன் கொண்ட கோர்கள் மற்றும் இரண்டு ஹேவ் எஃபெக்ஷியன் கோர் ஆகியவற்றைக் கொண்டவை ஆகும்.  


ரேம்


ஆப்பிள் போனின் நான்கு மாடல்களிலும் 8 ஜிபி ரேம் உள்ளன. iPhone 16 Pro போன், 128 GB, 256 GB, 512 GB மற்றும் 1 TB சேமிப்பகத்துடன் கிடைக்கிறது. ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 256 ஜிபியில் தொடங்குகிறது மற்றும் 512 ஜிபி மற்றும் 1 டிபி சேமிப்பக விருப்பங்களிலும் கிடைக்கிறது.


கேமரா 


ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் 12 எம்பி செல்ஃபி கேமராவுடன் 48 எம்பி ப்ரைமரி வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 12 எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் ஆகியவற்றைக் கொண்ட இரட்டை கேமரா அமைப்பு கொண்டது என்றால், ஐபோன் 16 ப்ரோ சீரிஸ் 48 எம்பி வைட் ஆங்கிள், 48 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள், 12 எம்பி 5x டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 12 எம்பி செல்ஃபி கேமரா ஆகியவற்றைக் கொண்டது.  ஐபோன் 16 ப்ரோ சீரிஸ் 4கே வீடியோவை 120எஃப்பிஎஸ் உடன் பதிவு செய்ய முடியும், அதே சமயம் ஐபோன் 16 சீரிஸில் 60எஃப்பிஎஸ் மட்டுமே.


ஆப்பிள் நுண்ணறிவு அம்சங்கள்


நான்கு iPhone 16 மாடல்களிலும் Apple Intelligence அம்சங்கள் உள்ளன. ஆப்பிள் அதன் AI அம்சங்களை எதிர்கால iOS 18.1/18.2 மென்பொருள் புதுப்பிப்புடன் அறிமுகப்படுத்தும் என்பதும், இது இந்த ஆண்டின் பிற்பகுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | UPI பரிவர்த்தனை வரம்பை ₹5 லட்சமாக அதிகரித்தது NPCI


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ