தொழில்நுட்பம் குறித்த தகவல்களுக்கு நீங்கள் புதியவராக இருந்தால் நிச்சையம் பல்வேறு வகையான Wi-Fi பற்றி அறிந்துகொள்வது மிகவும் சவாலான காரியம்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறிப்பாக உங்கள் வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ Wi-fi இயந்திரம் ஒன்றினை நீங்கள் பெற விரும்பினால், எந்தவொரு Wi-Fi உங்களின் தேவைகளுக்கு ஏற்றது என அறிந்துக்கொள்ள வேண்டும். உங்கள் தேவைக்கு எந்த Wi-fi-ன் வன்பொருள் ஆதரிக்கிறது என்பதையும், சிக்கலான தொழில்நுட்ப விதிகளை கண்டுபிடிக்க வேண்டும். 


இந்த சிக்கலை புரிந்துகொண்டு தான் Wi-Fi தரத்தின் சமீபத்திய தலைமுறை Wi-Fi 6 என்னும் பெயருடன் வெளியாகவுள்ளது. மன்னர் ஆட்சியில் 23-ஆம் புலிகேசி, 24-ஆம் புலிகேசி என அடுத்தடுத்த மன்னர் வருவதைப்போல்... அடுத்தடுத்து வரும் Wi-fi இயந்திரங்களும் எண் ஒன்றினை கூட்டி வருகின்றது.


அந்த வகையில் தற்போது வெளியாகவுள்ள Wi-Fi 6 என்பது Wi-Fi 802.11ax க்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மிகவும் நுகர்வோர்-நட்புப் பெயராகும். முந்தைய தலைமுறை Wi-fi-னை விட கணிசமான அளவு வேகம் மற்றும் நம்பகத்தன்மை மேம்படுத்தப்பட்டு வெளியாகியுள்ளது. 


புதிய தலைமுறை Wi-fi இயந்திரங்களானது எந்த அம்சங்களை வழங்குவது என்பதைப் புரிந்துகொள்ளுவதற்கு எளிதாக புதிய பெயர்களை சூட்டி வருகிறது. அந்த வகையில் Wi-Fi 5 (802.11ac) மற்றும் Wi-Fi 4 (802.11n)  என எளிமையான தரவரிசைகளுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.


புதிய தரமானது Wi-Fi 6 ஆனது முந்தைய தலைமுறையை விட 37% வேகமாக செயல்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. Wi-Fi 6 ஆனது 11Gbit/s  வரை மேம்படுத்தலாம், மேலும் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டின் மூலம் நான்கு முறை பயனர் செயல்திறன் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இத்துடன் 1024QAM முறைமை, ஒரு சேனலுக்கு 9 பயனீட்டாளர்களைக் கொண்ட கொடுப்பனவு, ஒவ்வொரு பயனருக்கும் 26 உபாகாரியர்கள் என பல அம்சங்கள் கூட்டப்பட்டுள்ளது. Wi-Fi 6 வழக்கம் போல் 2.4GHz மற்றும் 5GHz பட்டயங்களில் செயல்படும், ஆனால் வணிக பயன்பாட்டிற்கு உபயோகிக்கும் பட்சத்தில் 1GHz - 7GHz க்கும் இடையே கூடுதல் அதிர்வெண்களை வழங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.