தற்கொலை செய்துகொண்ட ரோபா... ஓவர்டைம் வேலை பார்த்ததால் விபரீத முடிவா...?
Robot Suicide: தென்கொரியாவில் மக்களுக்கு சேவை செய்யும் ரோபாட் ஒன்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
Robot Suicide In South Korea: தொழில்நுட்ப வளர்ச்சி என்பது கடந்த சில ஆண்டுகளாக அசுரத்தனமாக உச்சத்தை எட்டியிருக்கிறது. ஒவ்வொரு துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி தங்களின் கால் தடங்களை பதித்து வருகின்றன. இனி வரும் காலங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இசைந்து வாழ மனிதர்கள் பழகிக்கொள்ள வேண்டும் என்பதே வல்லுநர்களின் குரலாக இருக்கிறது.
மறுபுறம் செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்களும் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகின்றன. அதிலும் ஒவ்வொரு துறை சார்ந்தும், குறிப்பிட்ட பணிக்காகவும் சில ரோபோக்கள் தயார் செய்யப்படுகின்றன. இவை மனிதர்களின் வேலைப் பளுவை குறைக்கும் நோக்கத்துடனும், நேர்த்தியான மற்றும் விரைவான பணிக்காகவும் உருவாக்கப்படுகின்றன. அந்த வகையில், தென் கொரியாவில் பொது மக்களுக்கு உதவும் வகையிலான ஒரு ரோபாட் தயாரிக்கப்பட்டது. ஆனால் அது இப்போது செய்தியில்லை.
கடந்தாண்டு பணிக்கு சேர்ந்த ரோபாட்
இந்த பொதுமக்களுக்கு உதவும் ரோபாட் தற்கொலை செய்து உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதவும் படியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்திருப்பதாகவும், அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. தென்கொரியாவில் உள்ள குமி (Gumi) என்ற நகரின் சிட்டி கவுன்சிலில் இந்த ரோபாட் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
இந்த குமி சிட்டி கவுன்சில் அலுவலகத்தில்தான் அந்த ரோபாட் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தினமும் ஆவணங்களை டெலிவரி செய்வது, உள்ளூர் மக்களுக்கு தகவல்களை கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட பணிகளுக்கு இந்த ரோபாட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரோபாட் இந்த பணியில் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சிட்டி ஹாலின் ஒரு பகுதியாக அது இருந்தது என்றும் அது எங்களில் ஒன்று என்று குமி சிட்டி கவுன்சில் அதிகாரிகள் உருக்கமாக தெரிவிக்கின்றனர்.
உலகின் முதல் ரோபாட் தற்கொலை
உலகின் முதல் ரோபாட் தற்கொலையாக இது பார்க்கப்படும் வேளையில், தென்கொரியாவின் இந்த குமி நகரே அதற்கு இரங்கல் செலுத்தியது. அதாவது குமி சிட்டி ஹாலில் இரண்டு மீட்டர் படிகட்டில் இருந்து கீழே விழுந்து அந்த ரோபாட் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அதுவும் அந்த கட்டடத்தின் முதல் மற்றும் இரண்டாம் தளத்திற்கு மத்தியில் மொத்தமாக சேதமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அது கீழே விழுவதை பார்த்த சில கூறுகையில், அது ஒரே இடத்தையே சுற்றி வந்தது, ஏதோ பிரச்னை என்பது போல் இருந்தது, உடனே கீழே விழுந்துவிட்டது என்கின்றனர். இருப்பினும், அதன் தற்கொலைக்கான காரணத்தை அறிய விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ரோபாட்டின் பாகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது, அது தயாரிக்கப்பட்ட நிறுவனத்தால் ஆய்வு செய்யப்பட்டு முடிவு தெபரிவிக்கப்படும் என்கின்றனர்.
தினமும் 7 மணிநேர வேலை
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த Bear Robotics என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தால் தற்கொலை செய்துகொண்ட ரோபாட் தயாரிக்கப்பட்டது. அதற்கென, குமி சிட்டி கவுன்சில் அலுவலகத்தில் சொந்த அடையாள அட்டை இருந்தது. அதன் பணி நேரம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆகும்.
மற்ற ரோபோக்களைப் போலின்றி, இந்த ரோபாட் பொதுவாக ஒரு தளத்தை மட்டுமே பயன்படுத்தாமல் பல தளங்களுக்கு செல்லக்கூடியது. குமி சிட்டி கவுன்சில் கட்டடத்தின் லிஃப்ட்டை பயன்படுத்தி அந்த ரோபாட் பல தளங்களுக்கு செல்லும். தற்போது புதிய ரோபாட்டை வாங்கும் ஐடியாவில் அந்த சிட்டி கவுன்சில் இல்லை. தென் கொரியா பல்வேறு துறைகளில் ரோபாட்கள் பரவலா பயன்படுத்தப்படுகின்றன.
சமூக வலைதளங்களிலும் பலர் அதற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், சிலரோ ஓய்வின்றி, விடுமுறையின்றி, எந்த பலனும் இன்றி ரோபாட்கள் வேலை பார்ப்பதால் வந்த வினை, ரோபாட்களுக்கும் சங்கம் தேவை என நகைச்சுவை கலந்த தொனியில் பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | அதிக சம்பளம் பெறும் Top 10 CEO-க்கள்? பட்டியலில் இடம் பிடித்த ஒற்றை இந்தியர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ