சுற்றுலா செல்ல மக்களின் தேர்வாக உள்ள டாப் ‘10’ நாடுகள் இவைதான்..!!

சுற்றுலா வளர்ச்சிக் குறியீட்டில், மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாக அமெரிக்கா முதலிடத்திலும், பூமியில் சொர்க்கம் என்று அழைக்கப்படும் ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து 10வது இடத்திலும் உள்ளன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 12, 2024, 11:19 AM IST
  • உலகம் முழுவதிலுமிருந்து அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நாடுகள்.
  • ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து 10வது இடத்தில் உள்ளது.
  • சுற்றுலாவிற்காக மக்களின் தேர்வாக உள்ள முதல் 10 நாடுகள்.
சுற்றுலா செல்ல மக்களின் தேர்வாக உள்ள டாப் ‘10’ நாடுகள் இவைதான்..!! title=

உலகப் பொருளாதார மன்றம் (WEF) சமீபத்தில் சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் குறியீட்டை (TTDI) வெளியிட்டது. இந்த குறியீட்டில் பயணம் மற்றும் சுற்றுலாவின் அடிப்படையில் முதல் 10 நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த குறியீட்டில், மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாக அமெரிக்கா முதலிடத்திலும், பூமியில் சொர்க்கம் என்று அழைக்கப்படும் ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து 10வது இடத்திலும் உள்ளன.

TTDI குறியீட்டில் உள்ள நாடுகளின் பட்டியல் தயாரிக்கையில், பயணம் மற்றும் சுற்றுலாத் துறையில் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் காரணிகள் மற்றும் கொள்கைகளை கொண்ட நாடுகளை கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது. சுற்றுலா நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறது. 2024ம் ஆண்டுக்கான இந்த குறியீட்டில் 119 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இதில் முதல் 10 நாடுகள் உலகம் முழுவதிலுமிருந்து அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றன என்று கூறப்பட்டுள்ளது.

சுற்றுலாவிற்காக மக்களின் தேர்வாக உள்ள முதல் 10 நாடுகள் 

1. அமெரிக்கா (மதிப்பெண் 5.24)
2. ஸ்பெயின் (மதிப்பெண் 5.18)
3. ஜப்பான் (மதிப்பெண் 5.09)
4. பிரான்ஸ் (மதிப்பெண் 5.07)
5. ஆஸ்திரேலியா (மதிப்பெண் 5.00)
6. ஜெர்மனி (மதிப்பெண் 5.00)
7. பிரிட்டன் (மதிப்பெண் 4.96)
8. சீனா (மதிப்பெண் 4.94)
9. இத்தாலி (மதிப்பெண் 4.90)
10. சுவிட்சர்லாந்து (மதிப்பெண் 4.81)

இந்தியாவின் தரவரிசை

சுற்றுலா தொடர்பான குறியீட்டில் இந்தியா 39வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் இயற்கை அழகு அம்சத்தில் 6வது இடத்திலும், கலாச்சாரம் அம்சத்தில் 9வது இடத்திலும் உள்ளதால் சுற்றுலாத் துறையில் இந்தியா மேம்பட்டு வருவதாக WEF கூறியது.

உள்நாட்டு பொருளாதாரம் மட்டுமல்ல, உலகப் பொருளாதாரத்திற்கும் சுற்றுலாத்துறை பெரிதும் உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் வெவ்வேறு இடங்களுக்குப் பயணம் செய்கிறார்கள். சுற்றுலா மேம்பட்டால், அதனை சார்ந்த பல துறைகள் மேம்படும். உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையின்படி, சுற்றுலாத் துறை 2024ம் ஆண்டில்  2.9% ஆகவும், 2023ம் ஆண்டில் 3% ஆகவும் வளரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

TTDI குறியீட்டில் முதல் இடத்தில் உள்ள ஐந்து நாடுகளில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்

அமெரிக்கா

அமெரிக்காவில், லிபர்ட்டி சிலை, கிரான் கேனான், பனிப்பாறை தேசிய பூங்கா, யெல்லோஸ்டோன் தேசிய பூங்கா போன்ற இடங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள். மேலும், நீங்கள் சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் போன்ற அழகான நகரங்களுக்கும் செல்லலாம். 2023 ஆம் ஆண்டில், 80 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அமெரிக்காவிற்கு வந்திருக்கிறார்கள் என கூறப்படுகிறது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் $1.8 டிரில்லியன்  என்ற அளவில் பங்களித்துள்ளது.

ஸ்பெயின்

ஸ்பெயின், கட்டிடக்கலை சிறப்புக்கு பிரபலமானது. இங்கு பார்சிலோனா மற்றும் கிரனாடா போன்ற நகரங்கள் மிக அழகானவை. மேலும், இந்நாட்டின் கடற்கரைகள் மிகவும் அழகாக இருக்கின்றன, இங்குள்ள அனைத்து திருவிழாக்களும் மிகவும் வண்ணமயமானவை. 2023ம் ஆண்டில், சுமார் 70 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் ஸ்பெயினுக்கு வருகை தந்துள்ளனர். இது 150 பில்லியன் டாலர் வருவாய் ஆதாயத்தைக் கொண்டு வந்துள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க | வெளிநாடு சுற்றுலா... ‘இந்த’ நாடுகளுக்கு செல்ல... அதிகம் செலவாகாது..!!

ஜப்பான்

பாரம்பரியம் மற்றும் நவீன கண்டுபிடிப்புகளின் அற்புதமான கலவையால் சுற்றுலா பயணிகள் ஜப்பானை மிகவும் விரும்புகிறார்கள். கியோட்டோ நகரின் கோயில்களும், டோக்கியோ நகரின் பிரகாசமான தெருக்களும் மிகவும் பிரபலமானவை. 2023ம் ஆண்டில், 30 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஜப்பானுக்கு வருகை தந்துள்ளனர். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு 300 பில்லியன் டாலர் வருவாய் ஆதாயத்தைக் கொண்டு வந்துள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸ்

புகழ் பெற்ற ஈபிள் கோபுரத்தை கொண்ட நாடான பிரான்ஸ் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான நாடு. இங்குள்ள ப்ரோவென்ஸ் பகுதியில் உள்ள கிராமங்கள் உலகின் மிக அழகான கிராமங்களில் ஒன்றாக கருதப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 80 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் பிரான்சுக்கு வருகை தருகின்றனர், இதன் மூலம் 200 பில்லியன் டாலர்கள் வருவாய் ஆதாயத்தைக் கொண்டு வந்துள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலியா

இயற்கை அழகு மற்றும் பல்வேறு வகையான காட்டு விலங்குகள் நிறைந்த ஆஸ்திரேலியா, ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை இந்நாடு ஈர்க்கிறது. சிட்னி, மெல்போர்ன் போன்ற நகரங்களில் பயணம் செய்வது வித்தியாசமான மற்றும் தனித்துவமான அனுபவத்தை நமக்கு கொடுக்கும். 2023 ஆம் ஆண்டில், 80 லட்சம் சுற்றுலாப் பயணிகள் ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ளனர், இது நாட்டின் பொருளாதாரத்திற்கு 60 பில்லியன் டாலர் வருவாய் ஆதாயத்தைக் கொண்டு வந்துள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க |  மேகாலயா டூர் செல்ல பிளானா... IRCTC வழங்கும் அசத்தல் பேக்கேஜ் விபரம்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News