சீனாவை தலைமையகமாக கொண்ட பிரபல மொபைல் நிறுவனம் Xiaomi தனது அடுத்த வரவான Redmi 6 Pro குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுமார் 5.81" அளவு தொடுதிரை, 19:9 திரை விகிதாச்சாரம் கொண்ட Redmi 6 Pro மொபைல் சந்தையில் புதிய மாற்றத்தினை கொண்டு வரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


இந்த Redmi 6 Pro ஆனது மூன்று வகைகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி...


  • 3GB RAM + 32GB சேமிப்பு திறன் கொண்ட மொபைல் விலை CNY 999 (இந்திய மதிப்பில் Rs 10,500)

  • 4GB RAM + 32GB சேமிப்பு திறன் கொண்ட மொபைல் விலை CNY 1999 (இந்திய மதிப்பில் Rs 12,500)

  • 4GB RAM + 64GB சேமிப்பு திறன் கொண்ட மொபைல் விலை CNY 1299 (இந்திய மதிப்பில் Rs 13,500)


எனினும் இதுவரையில் இந்த Redmi 6 Pro ஆனது இந்தியாவில் எப்போது வெளியாகும் என அறிவிப்புகள் வெளியாகவில்லை. இந்த Redmi 6 Pro ஆனது Redmi Note 5 Pro-ன் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக இருக்கும் என கருதப்படுகிறது.


Redmi 6 Pro சிறப்பம்சங்கள்...


  • 12MP + 5MP கேமிரா.

  • Face Unlock

  • octa-core Snapdragon 625 SoC  இயங்குதளம்.

  • 4000mAh பேட்டரி திறன்.

  • 5MP ஸட்டர் திறன். என வெளியாகும் இந்த மொபைல் ஆனல் சிவப்பு, பிங்க், பழுப்பு மற்றும் நீலம் ஆகிய நிறங்களில் கிடைக்கின்றது.