தெலுங்கானாவில் பெட்ரோல் விலை 9 காசுகள் குறைந்த நிலையில் அம்மாநிலத்தை சேர்ந்த ஒருவர் பிரதமர் நிவாரண நிதிக்கு 9 காசுகள் செலுத்தியுள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல நாட்களாக உயராமல், குறையாமல் தொடர்ந்து வந்த பெட்ரோல், டீசல் விலையானது கர்நாடக தேர்தலுக்கு பின் ரூபாய் கணக்கில் வேகமாக உயர்ந்தது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த பின் பெட்ரோல், டீசல் விலையானது பைசா கணக்கில் விலை குறைக்கப்பட்டது. 


இந்நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 பைசா குறைக்கப்பட்டதற்கு எதிராக, தெலுங்கானா வின் ராஜாண்ணா சிர்சிலாவை சேர்ந்த இளைஞர் சாந்து என்பவர் பிரதமர் நிவாரண நிதிக்காக 9 பைசாவுக்கு செக் அனுப்பியுள்ளார். 


இந்த பிரதமர் நிவாரண நிதியை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் அந்த இளைஞன் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்துள்ளார்.