அணிலுக்கு மறுவாழ்வு கொடுத்த துருக்கி மருத்துவர்கள்!
துருக்கியில் இரண்டு கால்களை இழந்த அணில் ஒன்றிற்கு முன்பகுதியில் செயற்கை கால் பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
துருக்கியில் இரண்டு கால்களை இழந்த அணில் ஒன்றிற்கு முன்பகுதியில் செயற்கை கால் பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
துருக்கியில் அணில் ஒன்று வலையில் சிக்கியதால் பலத்த காயமடைந்தது. உடனே கால்நடைப் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
மருத்துவர்களின் சோதனையில் அணிலின் 2 முன்னங்கால்கள் இழந்தது கண்டுபிடிக்கப்ப்பட்டது. அணில் என்றாலே துறு துறுப்புடன் ஓடித் திரியும் ஆனால் நடக்க முடியாமல் ஒரே இடத்தில் முடங்கிக் கிடந்தது.
பின்னர், கால்களை இழந்து தவித்த அணிலுக்கு புனரமைப்பு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து பிரத்தேக சக்கரங்களை வடிவமைத்து உடலுடன் பொருத்தியுள்ளனர்.
இதனால் இரண்டு கால்கள் இல்லாமலே செயற்கை காலுடன் அணில் தற்போது சுதந்திரமாக சுற்றி வருகிறது. இதன் மூலம் ஜீவகாருண்யம் என்பது இதுதான் என்பதை உலகிற்கு அந்த மருத்துவ குழு நிரூபித்துள்ளது குறிபிடத்தக்கது.