கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேசி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள இப்படம் வரும் ஜூன் 7-ஆம் தேதி  தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த திரைப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதையடுத்து, காலா படத்தின் பாடல்களை  தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் ம் மே 9-ஆம் நாள் இணையதளத்தில் வெளியிட்டார். 


இந்நிலையில், தற்போது இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடந்து வந்தன.அதையடுத்து, இந்தபடம் தணிக்கை குளுவினருக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் காலா படத்திற்கு யு/ஏ சான்று அளித்துள்ளனர். காலா படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஜூன் 7-ல் ரிலீஸாக உள்ளது.