மீண்டும் ரஷ்ய அதிபராகிறார் விளாடிமிர் புடின்!
ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற விளாடிமிர் புடின் மீண்டும் ரஷ்ய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற விளாடிமிர் புடின் மீண்டும் ரஷ்ய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் மீண்டு ஆறு ஆண்டுகள் இப்பதவியில் நீடிப்பார்.ரஷ்ய அதிபர் தேர்தல் நேற்று நடந்தது. இதில் சுயேச்சையாக போட்டியிட்ட அவருக்கு எதிர்ப்பு இருந்தாலும், புடினே மீண்டும் அதிபராவார் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்தன. புடினை எதிர்த்து 7 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
வாக்குச்சீட்டு முறையில் பலத்த பாதுகாப்புக்கு இடையே நேற்று நடந்த ஓட்டுப்பதிவில் மக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று ஓட்டளித்தனர்.ஓட்டுகள் உடனே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 76 சதவீத ஓட்டுகள் பெற்று புடின் அபார வெற்றி பெற்றார்.
இதன் மூலம் ரஷ்ய அதிபராக அடுத்த 6 ஆண்டுகள் இப்பதவியில் அவர் நீடிப்பார். தேர்தலில் முறைகேடுகள் நடைந்துள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், தேர்தல் வெற்றி தனது சாதனைகளுக்கான அங்கீகாரம் என புடின் மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.