இந்த நாடுகளுக்கு சென்றால் 3 ஆண்டுகள் பயணத் தடை: அச்சுறுத்தும் சவுதி அரேபியா
கொரோனா வைரஸ் மற்றும் அதன் புதிய மாறுபாபாடுகளின் பரவலைத் தடுக்க, அரசாங்கத்தின் `சிவப்பு பட்டியலில்’ இருக்கும் நாடுகளுக்கு பயணிக்கும் மக்கள் மீது மூன்று ஆண்டு பயணத் தடை விதிக்கப்படும் என சவுதி அரேபியா கூறியுள்ளது.
கொரோனா வைரஸ் மற்றும் அதன் புதிய மாறுபாடுகளின் பரவலைத் தடுக்க, அரசாங்கத்தின் `சிவப்பு பட்டியலில்’ இருக்கும் நாடுகளுக்கு பயணிக்கும் மக்கள் மீது மூன்று ஆண்டு பயணத் தடை விதிக்கப்படும் என சவுதி அரேபியா கூறியுள்ளது.
பெயரிடப்படாத உள்துறை அமைச்சக அதிகாரியை மேற்கோள் காட்டி மாநில செய்தி நிறுவனம் எஸ்.பி.ஏ, மார்ச் மாதம் 2020 முதல் முதல் முறையாக அதிகாரிகளின் முன் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்ட சில சவுதி குடிமக்கள் பயண விதிமுறைகளை மீறியதாகக் கூறினார்.
"இதில் சம்பந்தப்பட்டதாக நிரூபிக்கப்பட்டவர்கள் திரும்பியவுடன் சட்டப்படி கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர்கள் பதிலளிகக் வெண்டும். அவர்கள் கடுமையான அபராதங்களுக்கு உட்படுத்தப்படுவதோடு மூன்று வருடங்களுக்கு அவர்களது பயணத்திற்கு தடை விதிக்கப்படும்" என்று அந்த அதிகாரி கூறினார்.
ALSO READ: நண்பேன்டா? வட கொரியா தென் கொரியா நட்பு: நாடகமா? நடைமுறையில் சாத்தியமா?
ஆப்கானிஸ்தான் (Afghanistan), அர்ஜென்டினா, பிரேசில், எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, லெபனான், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, துருக்கி, வியட்நாம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்கு பயணம் செய்ய சவூதி அரேபியா தடை விதித்துள்ளது.
"குடிமக்கள் நேரடியாகவோ அல்லது வேறொரு நாடு வழியாகவோ இந்த பட்டியலில் உள்ள நாடுகளுக்கோ அல்லது தொற்றை கட்டுப்படுத்தாத அல்லது புதிய மாறுபாடுகள் கண்டறியப்பட்டுள்ள பிற நடுகளுக்கோ செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் வலியுறுத்துகிறது" என்று அந்த அதிகாரி கூறினார்.
சுமார் 30 மில்லியன் மக்கள்தொகை கொண்ட மிகப்பெரிய வளைகுடா நாடான சவுதி அரேபியாவில் (Saudi Arabia) செவ்வாயன்று 1,379 பேர் புதிதாக கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதனுடன் அங்கு மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 520,774 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு எண்ணிக்கை 8,189 ஆக உயர்ந்துள்ளது.
2020 ஜூன் மாதத்தில் 4,000 க்கு மேல் இருந்த தினசரி நோய்த்தொற்றுகளின் (Coronavirus) அளவு ஜனவரி தொடக்கத்தில் 100-க்கும் கீழ் குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: சவுதி அரேபியாவில் மாற்றத்திற்கான விதை; மெக்காவில் பெண் பாதுகாவலர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR