நண்பேன்டா? வட கொரியா தென் கொரியா நட்பு: நாடகமா? நடைமுறையில் சாத்தியமா?

தென் கொரியாவும் வட கொரியாவும் நீண்டகாலமாக மூடப்பட்டிருந்த தங்கள் தகவல்தொடர்புத் தடங்களை மீண்டும் தொடங்கவும் பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிக்கவும் ஒப்புக் கொண்டுள்ளன. 

Written by - ZEE Bureau | Last Updated : Jul 27, 2021, 05:18 PM IST
நண்பேன்டா? வட கொரியா தென் கொரியா நட்பு: நாடகமா? நடைமுறையில் சாத்தியமா?

சியோல்: உலகின் மிகக் கடுமையான எதிரிகள் இருவர் கைகோர்த்துள்ளனர். முறைத்துக்கொள்ளும் முகங்கள் முன்னோக்கி பார்க்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரோதம் விடை பெற்றதா? குரோதம் குறைந்து விட்டதா? ஆபத்தாய் பார்க்கப்பட்ட அண்டை நாட்டின் மீது இப்போது அன்பு கசிகிறதா? ஆம்!!

தென் கொரியாவும் (South Korea) வட கொரியாவும் நீண்டகாலமாக மூடப்பட்டிருந்த தங்கள் தகவல்தொடர்புத் தடங்களை மீண்டும் தொடங்கவும் பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிக்கவும் ஒப்புக் கொண்டுள்ளன. இரு நாடுகளும் ஆக்ரோஷமான எதிரிகளாக இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தனது அண்டை நாடான தென் கொரியா தங்கள் நாட்டுக்கு எதிராக சதி செய்வதாக வட கொரியா பலமுறை குற்றம் சாட்டியுள்ளது.

ஏப்ரல் முதல் முயற்சிகள் நடந்து கொண்டிருந்தன
எங்கள் இணை வலைத்தளமான WION இல் வெளியிடப்பட்ட செய்தியின்படி, தென் கொரியாவின் அதிபர் அலுவலகம் இரு நாடுகளுக்கிடையேயான தகவல்தொடர்புத் தடங்களை மீண்டும் தொடங்கவும் பரஸ்பர நட்பை அதிகரிக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதிபர் மூன் ஜே-இன் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் ஏப்ரல் முதல் பல முறை கடிதங்களை பரிமாறிக்கொண்டுள்ளனர். அதன் பின்னர் இரு தலைவர்களும் உறவுகளை சீராக்க ஒப்புக்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்பு இணைப்புகளை வட கொரியா முடக்கியது
அதிகரித்து வரும் பதற்றத்தை கருத்தில் கொண்டு, வட கொரியா (North Korea) கடந்த ஆண்டு ஜூன் 16 அன்று தென் கொரியாவுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்தது. இது மட்டுமல்லாமல், தென் கொரியா மீது துண்டுப்பிரசுர பிரச்சாரத்திற்கான குற்றம் சாட்டி, அதன் எல்லை நகரமான கேசோங்கில் உள்ள இடை-கொரிய தொடர்பு அலுவலகத்தையும் வட கொரியா மூடியது.

ALSO READ: ஒண்ணா நின்னு கெத்தா சமாளிப்போம்: உறுதி பூண்டன சீனாவும் வட கொரியாவும்

பலூன்கள் மூலம் துண்டு பிரசுரங்களை பரப்பி, தென் கொரியா தனக்கு எதிராக பிரச்சாரம் செய்வதாக வட கொரியா கூறியது. தலைவர் கிம் ஜாங் உனுக்கு (Kim Jong Un) எதிராக மக்களைத் தூண்டுவதற்கு இந்த துண்டு பிரசுரம் பயன்படுத்தப்படுவதாக வட கொரியா குற்றம் சாட்டியது.

நீண்ட காலமாகத் தொடரும் வட கொரியா தென் கொரியா மோதல்

கடந்த மாதம், தென் கொரிய அமைச்சக அதிகாரி ஒருவர், ”எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் உடனடியாக கொரிய நாடுகளுக்கு இடையேயான தொடர்பு தடத்தை மீட்டெடுக்க வேண்டும். தகவல் தொடர்புத் தளங்களை மீட்டெடுக்க வட கொரியாவை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.” என்று கூறியிருந்தார். இப்போது இரு நாடுகளும் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளன.

குறிப்பிடத்தக்க வகையில், வட கொரியா தென் கொரியா இடையிலான மொதல் 70 ஆண்டுகளுக்கும் மேலானது. இது உலகின் மிக நீண்ட மோதல் என்று பெயரிடப்பட்டது. அண்டை நாடுகளாக இருந்தபோதிலும், இரு நாடுகளும் ஒருபோதும் நல்ல உறவைக் கொண்டிருக்கவில்லை.

மொத்தம் 50 தொடர்புத்  தடங்கள் தொடங்கப்பட்டன

முன்னாள் சோவியத் இராணுவம் சியோலுக்கும் ஹெஜுக்கும் இடையிலான தொலைபேசி இணைப்பை துண்டித்த 26 ஆண்டுகளுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் ஹாட்லைன் சேவை 1971 செப்டம்பர் 22 அன்று தொடங்கப்பட்டது. 1971 முதல் வட கொரியா மற்றும் தென் கொரொயா இடையே மொத்தம் 50 தொலைபேசி இணைப்புகள் துவக்கப்பட்டன. இதில் இரண்டை கொரிய அதிபர்களும், மீதமுள்ளவற்றை இராணுவ மற்றும் உளவு அமைப்புகளும் பயன்படுத்தின.

ALSO READ: North Korea: எங்கும் பசி பட்டினி; தீர்வுக்கு பதிலாக அதிகாரிகளை நீக்கும் Kim Jong Un

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News