Saudi Arabia-UAE சர்ச்சையால் பெரும் பிரச்சனை: பெரிய ஷாக் கொடுக்குமா பெட்ரோல் விலை?

எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் பிளஸ் (OPEC+) உற்பத்தியை அதிகரிப்பது குறித்த எந்த திடமான முடிவையும் எடுக்கவில்லை. மேலும், சவுதி அரேபியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான சர்ச்சையும் ஆழமாகிக்கொண்டு இருக்கின்றது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 7, 2021, 06:07 PM IST
  • அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் தெரியவில்லை.
  • சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடையிலான சர்ச்சையால் உலக நாடுகள் அவதி.
  • எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க வேண்டும் என்ற ஒபெக் நாடுகள் முயற்சி.
Saudi Arabia-UAE சர்ச்சையால் பெரும் பிரச்சனை: பெரிய ஷாக் கொடுக்குமா பெட்ரோல் விலை?  title=

ரியாத்: அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் தெரியவில்லை. மாறாக, விலை இன்னும் அதிகரித்துக்கக்கூடும். ஆம்!! 

எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் பிளஸ் (OPEC+) உற்பத்தியை அதிகரிப்பது குறித்த எந்த திடமான முடிவையும் எடுக்கவில்லை. மேலும், சவுதி அரேபியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சர்ச்சையும் ஆழமாகிக்கொண்டு இருக்கின்றது. இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளும் தொடர்ந்து சிதைந்து வருகின்றன. 

இதன் காரணமாக பெரிய அளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் அதன் சுமைகளைத் தாங்க வேண்டியிருக்கும். இந்த யுத்தத்தின் காரணமாக, கச்சா எண்ணெய் விலையில் (Crude Oil Price) மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்படக்கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

வெளியீட்டு ஒப்பந்தம் குறித்த பதற்றம்

அல்ஜசீராவின் அறிக்கையின்படி, ஒபெக் + கூட்டமைப்பின் உள் மோதல்களால் எண்ணெய் சந்தையில் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த 6 ஆண்டுகளில் நியூயார்க்கில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இது தற்போது கடந்த 6 மாதங்களில் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது. வெளியீட்டு ஒப்பந்தம் தொடர்பாக சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பதற்றம் நிலவுகிறது. எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டாம் என்ற தற்போதைய ஒப்பந்தத்தை 2022 ஆம் ஆண்டு வரை நீட்டிக்க சவுதி அரேபியா முன்மொழிந்துள்ளது. ஆனால் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இதற்கு உடன்படவில்லை.

ALSO READ: Petrol Rate: ரூ.,100 நெருங்கும் பெட்ரோல் விலை, சென்னை வாசிகள் அதிர்ச்சி

சர்ச்சையில் சிக்கிய சந்திப்பு 

எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க வேண்டும் என்ற ஒபெக் மற்றும் பிற எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் முடிவை ஐக்கிய அரபு அமீரகம் எதிர்த்தது. ஐக்கிய அரபு அமீரகம் தனது சொந்த விதிமுறைகளின் பேரில் இந்த ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்ல பிடிவாதமாக உள்ளது. தனது எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்காமல், ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் திட்டத்தை ஆதரிக்க முடியாது என ஐக்கிய அரபு அமீரகம் திட்டவட்டமாக கூறியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற ஒபெக் + கூட்டம் இரு நாடுகளுக்கும் இடையிலான தகராறால் பெரும் கிச்சலை சந்தித்தது. அடுத்த கூட்டம் எப்போது நடக்கும் என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை. தற்போதைய உற்பத்தியை 2022 க்கு நீட்டிக்கும் திட்டத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் எதிர்ப்புத் தெரிவிக்கிறது.

சமநிலையை சவுதி மேற்கோள் காட்டியது

கச்சா எண்ணெயின் தேவை குறைவதால், விலைகளில் வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டது. எனவே சமநிலையை பராமரிக்க உற்பத்தியைக் குறைக்க முடிவு செய்யப்பட்டது. உலகளாவிய பொருளாதார மீட்சி இன்னும் கடினமான காலகட்டத்தில் இருப்பதாக சவுதி அரேபியா (Saudi Arabia) கருதுகிறது. சந்தையை சமநிலையில் வைத்திருக்க 2022 ஏப்ரல் வரை ஒப்பந்தம் நீட்டிக்கப்பட வேண்டும் என்று சவுதி விரும்புகிறது. ஆனால் ஐக்கிய அரபு அமீரகம் அந்த நிலைப்பாட்டிற்கு எதிராக உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் இது குறித்த சர்ச்சை தொடர்கிறது. இந்தியா உட்பட பல நாடுகள் இந்த முரண்பாட்டின் சுமைகளைத் தாங்க வேண்டியிருக்கும்.

தொடர்ந்து அச்சுறுத்தும் கச்சா எண்ணெய் 

இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலின் தாக்கம் எண்ணெய் விலைகளிலும் தெரியத் தொடங்கியுள்ளது. திங்களன்று, கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 77 டாலராக இருந்தது. இது 2018 க்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட மிக அதிக விலையாகும். எண்ணெய் விலை பீப்பாய்க்கு 80 டாலர் என்ற நிலையை எட்டும் என பல வல்லுநர்கள் சமீபத்தில் மதிப்பிட்டனர்.

ஒபெக் நாடுகளுக்கிடையேயான பரஸ்பர தகராறு விரைவில் தீர்க்கப்படாவிட்டால், கச்சா எண்ணெயின் விலை இன்னும் விரைவாக அதிகரிக்கக்கூடும் என்பது அவர்களது கருத்தாக உள்ளது. கடந்த ஆண்டு அதிகரித்த வரியை மத்திய அரசு குறைத்தால், இந்தியாவில் எண்ணெய் விலை குறைவதற்கான சிறிய சாத்தியக்கூறுகள் உள்ளன. ஏனெனில், உலகளாவிய கச்சா எண்ணெயின் விலை இப்போதைக்கு குறைவதாகத் தெரியவில்லை.

ALSO READ: Haiti அதிபர் ஜோவெனல் மோயிஸ் படுகொலை; மனைவியின் நிலைமை கவலைக்கிடம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News