புதுடெல்லி: சமகால உலகில் தாக்கத்தை ஏற்படுத்திய 100 பேரின் பட்டியலை டைம் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அனைவருக்கும் முன்னோடிகளாக திகழ்பவர்கள், தலைவர்கள், பிரபலங்கள், கலைஞர்கள் மற்றும் சின்னங்களின் ஆண்டு பட்டியலை டைம் இதழ் வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டைமின் 100 செல்வாக்கு மிக்க நபர்களில் இடம் பிடித்த இந்தியர்களின் பட்டியல்


  1. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி டைம் இதழின் '2020 ஆம் ஆண்டில் மிகவும் செல்வாக்கு மிக்க 100 பேர்' பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

  2. பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானாவும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

  3. டெல்லி ஷாஹீன் பாக் போராட்டத்தின் முகமாக மாறிய 82 வயதான பில்கிஸ் 'பாட்டி'.

  4.  பேராசிரியர் ரவீந்திர குப்தா, எச்.ஐ.வி / எய்ட்ஸ் சிகிச்சையில் பணியாற்றியவர்.

  5.  Alphabet மற்றும் Google நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை.


இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே இந்திய அரசியல்வாதி.



2014 ஆம் ஆண்டில் பிரமதராக பதவி ஏற்றதில் இருந்து   பிரதமர் மோடி இந்த பட்டியலில் நான்கு முறை இடம் பிடித்துள்ளார். 2014, 2015, 2017 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் அவரது பெயர் பெருமைமிகு இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. 2015 ஆம் ஆண்டில், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, பிரதமர் நரேந்திர மோதி பற்றி, பத்திரிகையில் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, TIME 100 ஆண்டு பட்டியலில் உலகின் மிக முக்கியமான கலைஞர்கள், தலைவர்கள், விஞ்ஞானிகள், ஆர்வலர்கள் மற்றும் தொழில்முனைவோர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பட்டியலில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் பலர் உலக மக்களுக்கு முன்னோடியாக இருக்கின்றனர். அவர்களில் நூறு பேரை செல்வாக்குள்ள மனிதர்களாக டைம் பத்திரிகை பட்டியலிடுகிறது.  
மிகவும் செல்வாக்குள்ள 100 பேர் அடங்கிய பட்டியலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கமலா ஹாரிஸ், முன்னாள் துணை அதிபர் மற்றும் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், அமெரிக்க மருத்துவர் டாக்டர் Anthony Fauci, ஜெர்மன் சான்சிலர் ஏங்கேலா மெர்க்கெல் மற்றும் பிரேசில் அதிபர் Jair Bolsonaro ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.   


Also Read | Saudi Arabia: அக்டோபர் 4 முதல் Umrah யாத்திரை மீண்டும் படிப்படியாக தொடங்கப்படும்