Saudi Arabia: அக்டோபர் 4 முதல் Umrah யாத்திரை மீண்டும் படிப்படியாக தொடங்கப்படும்

செளதி அரேபியாவில் வசிப்பவர்கள் உம்ரா யாத்திரை மேற்கொள்ள  அக்டோபர் 4 ஆம் தேதி முதல் அனுமதி வழங்கப்படும் என்று அந்நாடு புதன்கிழமையன்று அறிவிப்பு வெளியிட்டது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 23, 2020, 07:29 PM IST
Saudi Arabia: அக்டோபர் 4 முதல் Umrah யாத்திரை மீண்டும் படிப்படியாக தொடங்கப்படும் title=

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்படுத்திய கவலைகளினால், ஏழு மாதங்களாக Umrah யாத்திரை நிறுத்தப்பட்டிருந்ததாக செளதி அரேபியாவின் செய்தி நிறுவனம் SPA தெரிவித்துள்ளது.

உம்ரா என்பது மக்கா மற்றும் மதீனாவுக்கு இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் புனித யாத்திரை ஆகும். இது ஆண்டின் அனைத்து நாட்களிலும் மேற்கொள்ளப்படுகிறது, கடந்த ஆண்டு 19 மில்லியன் மக்கள் உம்ரா யாத்திரை வந்திருந்தனர். ஆனால், சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பரவிய நிலையில் மார்ச் மாதத்தில் செளதி அரேபியா உம்ரா யாத்திரையை நிறுத்தி வைத்தது.  

தற்போது அக்டோபர் 4ஆம் தேதி முதல் உள்நாட்டில் வசிக்கும் 6,000 குடிமக்கள்  தினசரி உம்ரா செய்ய அனுமதிக்கப்படுவார்கள். முன்னெச்சரிக்கை சுகாதார நடவடிக்கைகள் அனைத்தும் பின்பற்றப்பட வேண்டியது கட்டாயம் என்றும் செளதி அரசு அறிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பிறகு தினசரி 20,000 பேர் உம்ரா யாத்திரையை மேற்கொள்ளலாம் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு தற்போது 30 சதவீதத்தினருக்கு (தினசரி 6000 பேர்) மட்டுமே அனுமதி கொடுத்திருக்கிறது என SPA கூறியது.  இந்த எண்ணிக்கை அக்டோபர் 18ஆம் தேதிக்குள் 75 சதவீத அளவுக்கு அதிகரிக்கப்படலாம்.

Also Read | பூஜை அறை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய சில முக்கிய தகவல்!!
தொற்றுநோய் அபாயங்கள் முடியும் வரை உம்ரா யாத்திரை குறித்து செளதி அரேபியா சில அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.  நவம்பர் 1 முதல், திருத்தப்பட்ட திறனின் 100 சதவீதம் வரை உம்ரா யாத்திரைக்கு அனுமதி வழங்கப்படும். குறிப்பிட்ட சில நாடுகளைச் சேர்ந்த யாத்ரீகர்களுக்கு மட்டுமே அனுமதி என்று SPA தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு, ஹஜ் யாத்திரைக்கு வரையறை விதிக்கப்பட்டது. வழக்கமாக ஆண்டுதோறும் சுமார் 3 மில்லியன் மக்களை ஈர்க்கும் உலகின் மிகப் பெரிய யாத்திரையில் இந்த ஆண்டு சில ஆயிரம் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர்.  
ஹஜ், உம்ரா போன்ற புனித யாத்திரையில் செளதி அரேபியாவுக்கு ஆண்டுதோறும் சுமார் 12 பில்லியன் டாலர் வருமானம் கிடைக்கிறது என அதிகாரபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.  

கொரோனாவின் தாக்கம் சர்வதேச அளவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாயன்று நிலவரப்படி, செளதி அரேபியாவில் மொத்தம் 3,30,798 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது. கோவிட் நோயால் 4,542 பேர் உயிரிழந்துள்ளனர்.    

கொரோனா வைரஸின் தாக்கம் தொடங்கியதில் இருந்து, புனித யாத்திரைகள் செல்வதற்கு பல நாடுகளும் கட்டுப்பாடுகல் விதிக்கின்றன. பாரம்பரிய பெருமை பெற்ற பல புனிதத் தலங்கள் இருக்கும் இந்தியாவில், பல நாடுகளில் இருந்தும் மக்கள் ஆன்மீக யாத்திரை வருவார்கள்.  இந்த ஆண்டு இந்தியாவிலும் பல்வேறு மதத்தலங்கள் கொரோனா என்னும் கொடுங்காலனால் மூடப்பட்டுள்ளன.    

Also Read | இந்த 10 பொருட்களை நன்கொடையாக அளித்தால் உங்களுக்கு 10 மடங்கு லாபம்..!

Trending News