புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆக்கிரமிப்புக்குப் பிறகு, காபூலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது மற்றும் தஜிகிஸ்தானின் துஷான்பேவில் இருந்து 78 பேர் சிறப்பு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். காபூலில் இருந்து நேற்று (ஆகஸ்ட் 23) 78 பேர் கொண்ட குழு இந்திய விமானப்படை விமானம் மூலம் கொண்டு தாயகம் அழைத்து வரப்பட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குரு கிரந்த் சாஹிப்பின் 3 பிரதிகள் காபூலில் இருந்து டெல்லி வந்தடைந்தன


துஷான்பேவில் இருந்து டெல்லிக்கு வந்தவர்களில் 44 ஆப்கானிய சீக்கியர்களும் அடங்குவர், அவர்கள் காபூலில் இருந்து புனித ஸ்ரீ குரு கிரந்த சாஹிப்பின் மூன்று பிரதிகளையும் கொண்டு வந்துள்ளனர். அவர்களுடன், காபூலில் சிக்கிய 25 இந்திய குடிமக்களும் தில்லியை வந்தடைந்துள்ளனர். அனைத்து பயணிகளும் துஷான்பேயில் இருந்து டெல்லிக்கு சிறப்பு ஏர் இந்தியா விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர்.


டெல்லியை அடைந்ததும், 2 மத்திய அமைச்சர்கள் அவர்களை வரவேற்றனர். இது தவிர, இந்திய அரசின் அதிகாரிகள், பாரதீய ஜனதா மற்றும் இந்திய உலக மன்றத்தின் உறுப்பினர்களும் அவருக்கு உதவ விமான நிலையத்தை அடைந்தனர். இதன் பிறகு,  ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப் என்னும் சீக்கிய புனித் நூலின் மூன்று பிரதிகள், டெல்லி நியூ மஹாவீர் நகரில் அமைந்துள்ள குரு அர்ஜன் தேவ் ஜி  என்னும் குருத்வாராவுக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்படும்.


ALSO READ | அதிர்ச்சித் தகவல்! பெண்ணின் சடலங்களுடனும் உடல் உறவு கொள்ளும் தாலிபான்கள்..!!


விமானத்தில் எழுப்பப்பட்ட 'ஜோ போலே சோ நிஹால்' முழக்கங்கள்


இதற்கிடையில், சீக்கிய சமூகத்தின் ஒரு வீடியோ வெளிவந்துள்ளது, அதில் அவர்கள் விமானத்திற்குள் அமர்ந்த பிறகு சீக்கியர்களின் கோஷங்களான, 'ஜோ போலே சோ நிஹால்' மற்றும் 'வஹே குருஜி கா கல்சா - வஹே குருஜி கி ஃபதா' என்ற கோஷங்களை எழுப்பியதை காணமுடிகிறது. இந்த வீடியோவை வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாகி பகிர்ந்துள்ளார்.


ALSO READ | பாலியல் அடிமை முதல் தீக்குளிப்பது வரை; ஆப்கான் பெண் நீதிபதி விவரித்த திகில் சம்பவங்கள்


திங்களன்று 146 இந்தியர்கள் இந்தியாவை அடைந்தனர்


முன்னதாக, ஆப்கானிஸ்தானில் இருந்து  146 இந்தியர்கள் கத்தார் தலைநகர் தோஹாவிலிருந்து நான்கு வெவ்வேறு விமானங்கள் மூலம் திங்கள்கிழமை இந்தியா வந்தடைந்தனர். இவர்கள் கடந்த சில நாட்களில் காபூலில் இருந்து தோஹாவுக்கு, அமெரிக்கா மற்றும் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (NATO) விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.


ALSO READ | ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்திற்கு இடமில்லை; ஷரியத் சட்டம் தான்: தாலிபான்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR