இத்தாலிய ரிவியராவில் அமைந்துள்ள போர்டோபினோ, மிகவும் அழகான நகரங்களில் ஒன்றாகும். இது ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். இந்த நகரம் சிறிய துறைமுகத்தைச் சுற்றி பரவியுள்ளது, மேலும் கரையை ஒட்டிய வண்ணமயமான வர்ணம் பூசப்பட்ட கட்டிடங்களுக்கு பெயர் பெற்றது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து, போர்டோஃபினோ ஐரோப்பிய சுற்றுலா பயணிகளை  பெரிதும்  ஈர்த்துள்ளது, இப்போது அது உலகின் பணக்காரர்களுக்கான மிகவும் புகழ் பெற்ற ரிசார்ட்டாக உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அழகிய நகரம் வெளிர் நிற வீடுகள், கடல் உணவு உணவகங்கள் மற்றும் உயர்தரமான வசதிகளை தேடும் பயணிகளுக்கு ஏற்ற இடமாகும். இருப்பினும், செல்ஃபி பிரியர்களுக்கு, இந்த நகரம் பார்க்க சிறந்த இடமாக இருக்காது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் நீண்ட நேரம் 'தங்கியிருப்பதை' தடுக்க, நகரத்தில் உள்ளூர் அரசாங்கத்தால் No-Waiting மண்டலங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


குறிப்பிட்ட இடங்களில் செல்ஃபி எடுக்கும் போது, உள்ளூர் அதிகாரிகளால் ஒருவர் பிடிபட்டால், அவர் €275 ($303) அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இத்தாலியின் போர்டோஃபினோவின் மேயர் மேட்டியோ வியாகாவா இது குறித்து கூறுகையில், மக்கள் செல்ஃபி எடுப்பது "பெரும் குழப்பத்தை" ஏற்படுத்துகிறது. இதில் தெருக்களில் போக்குவரத்து பாதிப்பு மற்றும் பெரிய போக்குவரத்து நெரிசல்கள் ஆகியவை அடங்கும் என்றார்.


மேலும் படிக்க | New Zealand Earthquake: நியூசிலாந்தை உலுக்கிய நிலநடுக்கம்! 7.2 ரிக்டர் அளவிலான பூகம்பம்!


உள்ளூர் அரசாங்கம் ஈஸ்டர் வார இறுதியில் இந்த விதியை அறிமுகப்படுத்தியது . அக்டோபர் மாதம் விடுமுறை காலம் முடியும் வரை விதிக்கப்பட்ட செல்ஃபி விதியை நீட்டிக்க திட்டமிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட மண்டலங்களில் செல்ஃபி எடுக்க ஆசைப்படும் சுற்றுலாப் பயணிகளுக்கு, உள்ளூர் அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட தடை ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு நீக்கப்படுகிறது. போர்டோஃபினோ நகரத்தில் மட்டும் செல்ஃபி எடுக்கக்கூடாது என்று அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.


ஜப்பானில் கூட செல்ஃபி  எடுக்க தடை உள்ளது. செல்ஃபி எடுப்பவர்கள் மேல்நிலை வயரிங் மீது தவறுதலாக தொட்டு, மின்சாரம் தாக்கிவிடலாம் என்ற அச்சத்தில், ரயில்வே நெட்வொர்க் முழுவதும் செல்ஃபி ஸ்டிக் பயன்படுத்துவதை ஜப்பான் ரயில்வே அதிகாரிகள் தடை செய்துள்ளனர்.


இங்கிலாந்தில், கிரவுன் ஜூவல்ஸ் தொடர்பான பாதுகாப்புக் கவலைகள் காரணமாக, லண்டன் டவரின் சில பகுதிகளில் செல்பி எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜூவல் ஹவுஸ் அவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதால், அரச ரத்தினங்களுடன் எந்த விதமான புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை எடுப்பது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.


ஸ்பெயினில், பாம்பலோனாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் காளைகளின் ஓட்டப்பந்தயத்தில் செல்ஃபி எடுக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. ஓடும் காளைகளால் மக்கள் தாக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக இந்த விதி விதிக்கப்பட்டுள்ளது மற்றும் செல்ஃபிகிளிக் செய்து பிடிபட்டவர்களுக்கு € 3000 ($ 3,305) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


கலிஃபோர்னியாவின் தஹோ ஏரியை கவனித்து வரும் அதிகாரிகள், கரடிகளுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொள்ள பல பார்வையாளர்கள் முயற்சிப்பதைக் கண்டதால் செல்ஃபி எடுக்கும் நடைமுறையை தடை செய்துள்ளனர். முன்னதாக, இதனால் சில அசம்பாவிதங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | பட்டினி கிடந்தால் இயேசுவை பார்க்கலாம்! கென்யாவில் மூட நம்பிக்கைக்கு 47 பேர் பலி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ