நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. திங்கள்கிழமை காலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தீவிரம் 7.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் காலை 6.11 மணியளவில் ஏற்பட்டதாக நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது. நியூசிலாந்தில் உள்ள கர்மடெக் தீவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் மையம் பூமியில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் கர்மடெக் என்ற இடத்தில் இருந்தது. இதைத் தொடர்ந்து, கடலுக்கு அடியில் அதிக அளவில் எழுச்சி ஏற்படலாம் என்பதால் சுனாமி வர வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள், உயிரிழப்பு குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
மேலும் படிக்க | ரோடு ஒன்னும் சரியில்லை.. வெளுத்து வாங்கிய தருமபுரி எம்பி செந்தில்குமார்!
சுனாமி அச்சுறுத்தல்
மறுபுறம், நிலநடுக்கத்திற்குப் பிறகு சுனாமி ஆபத்து இல்லை என்று நியூசிலாந்தின் தேசிய அவசரகால மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் நியூசிலாந்து சுனாமி ஆபத்தை எதிர்கொள்ளும் அளவுக்கு சுனாமி உருவாக வாய்ப்பில்லை என்பதுதான் முதல்கட்ட மதிப்பீடாக உள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள டிவிட்டர் பதிவு இது...
There is no tsunami threat to New Zealand following the M7.1 Kermadec Islands earthquake. Based on current information, the initial assessment is that the earthquake is unlikely to have caused a tsunami that will pose a threat to New Zealand.
— National Emergency Management Agency (@NZcivildefence) April 24, 2023
எனினும், நிலநடுக்கத்தினால் சேதம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் ஏதும் இல்லை. நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி ஏற்பட வாய்ப்பு இருக்கலாம் என்ற அச்சத்தில் நியூசிலாந்து முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ