₹11 கோடிக்கு ‘உயிரை கொடுத்த’ பெண்.... பாகிஸ்தானின் வினோத வழக்கு..!!!
பாகிஸ்தானில் ஒரு பெண், வினோதமான முறையில் மோசடி செய்து 11 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார்
பாகிஸ்தானில் ஒரு வினோதமான வழக்கு வெளிவந்துள்ளது. ஒரு பெண், தான் இறந்துவிட்டதாக போலி மரண சான்றிதழ் கொடுத்து, நிறுவனத்திடமிருந்து 1.5 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 11 கோடி) ஆயுள் காப்பீடு பெற்றுள்ளார். இதைச் செய்ய அவர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தார்.
2011 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் (Pakistan) ஒரு மருத்துவர் உட்பட சில உள்ளாட்சி அதிகாரிகளுக்கு அந்த பெண் லஞ்சம் கொடுத்து, அவரது பெயரில் மரண சான்றிதழ் வாங்கியுள்ளார். அந்தப் பெண் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சான்றிதழைப் பயன்படுத்தி, அவரது குழந்தைகள் இரண்டு ஆயுள் காப்பீட்டுத் (Life Insurance) தொகையை 1.5 மில்லியன் டாலர் (சுமார் 23 கோடி பாகிஸ்தான் ரூபாய்) செலுத்தியதாக, அந்த அதிகாரி கூறினார்.
இறந்ததாக அறிவிக்கப்பட்ட பின்னர், கர்பே என்ற அந்த பெண் கராச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து குறைந்தது 10 முறை வெளிநாடு சென்று வந்திருக்கிறார். ஆனால் எந்த விமான நிறுவனமும் மோசடியைக் கண்டறிய முடியவில்லை.
அவர் சுமார் ஐந்து நாடுகளுக்கு பயணம் செய்து, பின் பாகிஸ்தானுக்கு திரும்பியுள்ளார். அமெரிக்க (America) அதிகாரிகள் அவர் குறித்த சந்தேகம் எழுப்பி, எச்சரிக்கை தகவலை அனுப்பியதை அடுத்து, இந்த பெரிய மோசடி குறித்து விசாரணையைத் தொடங்கினோம் என்றும் அவர் கூறினார்.
எஃப்.ஐ.ஏ மனித கடத்தல் பிரிவு, இப்போது அந்த பெண், அவரது மகன் மற்றும் மகள் மற்றும் ஒரு மருத்துவர் உட்பட சில உள்ளாட்சி அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்குகளை பதிவு செய்துள்ளது.
ALSO READ | கொரோனா விதியை மீறினா கொன்று விடுவேன்.. கண்டதும் சுட கிம் ஜாங் உன் உத்தரவு...!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR