ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் திங்களன்று 19 மாணவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 12 பேர் காயமடைந்தனர். காபூல் பல்கலைக்கழகத்தை குறிவைத்து இந்த தாக்குதலில் ஈடுபட்ட மூன்று துப்பாக்கி ஏந்திய நபர்களை பாதுகாப்பு படையினர் கொன்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

துப்பாக்கி ஏந்திய மூன்று  நபர்கள் காபூல் (Kabul) பல்கலைக்கழகத்தில் புத்தக கண்காட்சியில் நுழைந்தனர் என்றும்,  பின்னர் அவர்கள் மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்றும் ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்த தாக்குதலில் 19 மாணவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 12 பேர் காயமடைந்தனர்.


ALSO READ | கார்ட்டூன் சர்ச்சை: இப்போது இந்த நாட்டில் உள்ள இந்துக்கள் ட்வீட் செய்து உதவி கோரினர்..!!!


பல்கலைக்கழகத்தின் வடக்கு நுழைவாயிலில் குண்டுவெடிப்பு நடந்த பின்னர் துப்பாக்கிச் சூடு தொடங்கியது என உள்ளூர் ஊடகங்கள் கூறியுள்ளன. செய்தி சேனல்களில் காட்டப்படும் காட்சிகளில்,  பல மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் தப்பிக்க ஓடுவதைக் காட்டுகிறது. உள்ளே சிக்கிய மாணவர்களை பாதுகாப்புப் படையினர் வெளியே அழைத்துச் செல்கின்றனர். ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.


கிளர்ச்சியாளர்கள், அமெரிக்க (America) ஆதரவுடைய அரசாங்கத்துடன் தொடர்ந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. வளைகுடா நாடாப கட்டாரில் நடைபெற்று வரும் அந்த பேச்சுவார்த்தைகளில், ஆஃப்கானிஸ்தானில் (Afghanistan) உள்ள அமெரிக்க படைகள் விலக்கிக் கொள்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டுவருகிறது. இருப்பினும் தினசரி இங்கு தாக்குதல் நடவடிக்கைகள் தொடர்கின்றன. ஐஎஸ் எனப்படும் இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாத அமைப்பு, நாட்டில் ஷியா பிரிவினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது.


ALSO READ | US Presidential election 2020 Iowa state poll: ஏறுமுகத்தில் டொனால்ட் டிரம்ப்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR