கார்ட்டூன் சர்ச்சை: இப்போது இந்த நாட்டில் உள்ள இந்துக்கள் ட்வீட் செய்து உதவி கோரினர்..!!!

நபிகள் நாயகம் கார்ட்டூன் சர்ச்சையில், பங்களாதேஷில் உள்ள இந்துக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் ட்வீட் செய்து உதவி கோரினர்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 2, 2020, 06:28 PM IST
  • நபிகள் நாயகம் கார்ட்டூன் சர்ச்சையில், பங்களாதேஷில் உள்ள இந்துக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் ட்வீட் செய்து உதவி கோரினர்.
  • பேஸ்புக் பதிவில் பிரான்சின் புறக்கணிப்பது தொடர்பாக இஸ்லாமியர்களின் நடவடிக்கை குறித்து பேஸ்புக்கில் ஒரு இந்து இளைஞர் கருத்து தெரிவித்தார்.
கார்ட்டூன் சர்ச்சை: இப்போது இந்த நாட்டில் உள்ள இந்துக்கள் ட்வீட் செய்து உதவி கோரினர்..!!! title=

பிரான்சில் நபிகள் நாயகத்தின் கார்ட்டூன் சர்ச்சையில் பிரான்ஸ் ஆசிரியர் சாமுவேல் கொடூரமாக தலை வெட்டி கொல்லப்பட்டதை அடுத்து பங்களாதேஷில் இந்துக்கள் குறி வைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது.

இந்த தாக்குதல் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட, ஜாய் சக்ரவர்த்தி என்ற நபர் உதவி கேட்டுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

பேஸ்புக் பதிவில் பிரான்சின் (France) பொருட்களை புறக்கணிப்பது தொடர்பாக இஸ்லாமியர்களின் நடவடிக்கை குறித்து பேஸ்புக்கில் ஒரு இந்து இளைஞர் கருத்து தெரிவித்தார்.  இதை அடுத்து, அந்த இந்து இளைஞர் குடும்பத்தின் மீது பயங்கரமாக தாக்குதல் நடத்தியதுடன், அவர்கள் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது. இந்த சம்பவம் பங்களாதேஷின் கோமிலா நகரத்தைச் சேர்ந்தது. இது தொடர்பான வீடியோவை பகிர்ந்து கொண்ட ஜாய் சக்ரபர்த்தி, உதவி கோரியுள்ளார்.

ALSO READ | சீன ட்ரோன்களை பயன்படுத்தி காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடத்த பாக். சதி ..!!!!

இந்து குடும்பங்களின் வீடுகளை தாக்கிய இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கோமிலாவின் முராத்நகர் உபசிலாவின் கீழ் உள்ள கோர்பன்பூர் கிராமத்தில் நடந்ததாக பங்களாதேஷின் (Bangaldesh) உள்ளூர் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.  உள்ளூர் யூனியன் கவுன்சில் தலைவர் பங்குமார் சிவா அலுவலகம் மற்றும் சங்கர் தேப்நாத்தின் வீடு தீக்கிரையாக்கப்பட்டன. தாக்குதலின் படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகின்றன.

ALSO READ | ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவை ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் சந்தித்தார்..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News