Afghan Update: கண்மூடித்தனமான கொண்டாட்டம், வெற்றிக் களிப்பின் உச்சியில் விபத்து!!
பல பெரிய அமெரிக்க ஆயுதங்கள் தாலிபான் போராளிகளின் கைகளில் சிக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆயுதங்கள் அதிநவீனமானவை மற்றும் மிகவும் ஆபத்தானவை.
காபூல்: அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியுள்ளதால், தாலிபான்களின் மகிழ்ச்சி மேலோங்கி உள்ளது. இப்போது ஆப்கானிஸ்தான் முற்றிலும் தாலிபான் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விட்டதால், அவர்களை கையில் பிடிக்க முடியவில்லை. தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, பயங்கரவாதிகள் சாலைகளில் ஊர்வலம் செல்கிறார்கள், வானில் துப்பாக்கி சூடு நடத்துகிறார்கள்.
ஆப்கானிஸ்தான் (Afghanistan) தலைநகர் காபூலில், தாலிபான்கள் திறந்த ஜீப்புகளில் துப்பாக்கிகளை ஏந்திக்கொண்டு ஊர்வலம் செல்வதைக் காண முடிந்தது. தங்கள் மகிழ்ச்சியை உலகுக்கு காட்டும் வகையில், தாலிபான் போராளிகள், பத்திரிகையாளர்களையும் தங்களுடன் இந்த ஊர்வலங்களில் அழைத்துச் செல்கின்றனர்.
எனினும், இப்படி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தாலிபான் படைகளின் இரு வீரர்களுக்கு காயங்கள் ஏற்பட்டதால், அவர்களது மகிழ்ச்சி தடைபட்டது.
காபூல் விமான நிலையத்தில் கொண்டாட்டம்
டெய்லி மெயிலின் அறிக்கையின்படி, தாலிபானின் (Taliban) பத்ரி 313 பட்டாலியனின் போராளிகள் செவ்வாய்க்கிழமை காபூல் விமான நிலையத்தில் காரில் பயணித்து கொண்டாடினர். சில போராளிகள் இராணுவ சீருடையில் இருந்தனர், சிலர் சாதாரண உடைகளை அணிந்திருந்தனர். கார் வேகத்தை அதிகரித்தபோது, வெற்றியை கொண்டாடிய இரண்டு தாலிபான் போராளிகள், வாகனத்திலிருந்து கீழே விழுந்தனர்.
அமெரிக்க துருப்புக்களைப் போல உடையணிந்திருந்தனர்
வாகனத்திலிருந்து கீழே விழுந்த தாலிபான் போராளிகள், வலியால் கத்தியதோடு நீண்ட நேரம் அப்படியே அமர்ந்திருந்தனர். அங்கு சிறிது நேரம் அமைதி நிலவியது. அதற்குப் பிறகு, அனைவரும் காரில் அமர்ந்து மீண்டும் புறப்பட்டனர்.
ALSO READ: உயிர் பயத்தில் ஆப்கன் மக்கள்! தாலிபான்கள் வசம் பயோமெட்ரிக் கருவிகள்,நடக்கப்போவது என்ன?
பல பெரிய அமெரிக்க ஆயுதங்கள் தாலிபான் போராளிகளின் கைகளில் சிக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆயுதங்கள் அதிநவீனமானவை மற்றும் மிகவும் ஆபத்தானவை. தாலிபான் போராளிகள் அமெரிக்க வீரர்களைப் போல ஆடை அணிந்து சுற்றி காபூல் முழுவதும் வருகிறார்கள்.
முன்னதாக, திங்கள்கிழமை இரவு, அமெரிக்காவின் கடைசி விமானம் காபூலில் (Kabul) இருந்து புறப்பட்டதாக மத்திய கட்டளையின் தலைவர் ஜெனரல் பிராங்க் மெக்கன்சி கூறினார். 'எங்களால் பலரை அங்கிருந்து வெளியேற்ற முடியவில்லை. அதன் துயரம் எப்போதும் இருக்கும். எங்களுக்கு இன்னும் 10 நாட்கள் கிடைத்திருந்தால், நாங்கள் அனைவரையும் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றி இருப்போம். அதே நேரத்தில், விமான நிலையத்திற்கு வெளியே இருந்த தலிபான்கள் கடைசி அமெரிக்க விமானமும் சென்றதை அறிந்தவுடன், ஒரு கணத்தை கூட வீணடிக்காமல் உள்ளே நுழைந்தனர்.
ALSO READ: ஆப்கானிலிருந்து வெளியேறிய கடைசி அமெரிக்க வீரர்; அடுத்தது என்ன?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR