காபூல் விமான நிலையத்தில் நுழைந்த தாலிபான்கள், இராணுவ பொறுப்பிலும் பயங்கரவாதிகள்
பயங்கரவாத அமைப்பான ஹக்கானி நெட்வொர்க்கிற்கு காபூலின் பாதுகாப்பு பொறுப்பை தாலிபான் வழங்கியுள்ளது
காபூல்: ஆப்கானிஸ்தானில் காபூல் விமான நிலையத்தில் தலிபான் பயங்கரவாதிகள் நுழைந்துள்ளனர் என்ற செய்தி உலகிற்கு அச்சுறுதலாக உள்ளது. தாலிபானின் 313 பதரி சிறப்புப் படை பிரிவு, காபூல் விமான நிலையத்தின் இராணுவப் பிரிவில் நுழைந்துள்ளது. இப்போது வரை காபூல் விமான நிலையம் அமெரிக்க இராணுவத்தின் கட்டுபாட்டில் உள்ளதாக் கூறப்படும் நிலையில், காபூல் விமான நிலையம் மூலம் தான் உலகில் உள்ள நாடுகளுடன் தொடர்பில் இருக்கு பகுதி என்பதால், இந்த செய்தி முக்கியத்துவம் பெறுகிறது .
புதன்கிழமை, காபூல் (Kabul) விமான நிலையத்தில் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்தன, இதில் 13 அமெரிக்க வீரர்கள் உட்பட 170 பேர் கொல்லப்பட்டனர். இந்த குண்டுவெடிப்புகளுக்கு இஸ்லாமிக் ஸ்டேட் கோரசன் மாகாணம் (IS-KP) பொறுப்பேற்றது.
ALSO READ | Viral Pics: தாலிபான் ஆட்சிக்கு முன் ஆப்கானில் சுதந்திர பறவைகளாக இருந்த பெண்கள்
அமெரிக்காவின் மத்திய கட்டளையின் தலைவர் ஜெனரல் பிராங்க் மெக்கென்சி, துருப்புக்களை அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். ISIS மேலும் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்ற அச்சம் உள்ளது. விமான நிலையத்திற்குள் நுழைந்தாலும், விமான நிலையத்தை தாலிபான்கள் இயக்க முடியாது என அமெரிக்கா கூறியுள்ளது.
ALSO READ | Kabul Airport Blast: காபூல் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல்; ISIS பொறுப்பேற்பு
வெள்ளை மாளிகை பத்திரிகைத்துறை செயலாளர் ஜென் சாகியும் காபூலில் அதிக குண்டுவெடிப்புகள் ஏற்படக்கூடும் என்று அச்சம் வெளியிட்டுள்ளார். காபூல் விமான நிலையத்தின் தீவிரவாத தாக்குதல் நிகழும் வாய்ப்பை கருத்தில் கொண்டு அமெரிக்கா பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது. தலிபான்கள் (Taliban) மற்றும் ஹக்கானி நெட்வொர்க் இரண்டும் தனி பிரிவுகள் என அமெரிக்கா கூறியுள்ளது.
காபூல் விமான நிலைய தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்காவில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. தாக்குதலுக்கு பிறகு அமெரிக்கா, தாக்குதலுக்கு காரணமான IS-KP என்ற பயங்கரவாத அமைப்பை பழிவாங்குவதாக அறிவித்துள்ளது. அமெரிக்கா தனது எதிரிகளை கண்டுபிடித்து ஒழிக்கும் என்று ஜோ பிடன் கூறியுள்ளார்.
காபூல் நகரம் தாலிபன்களின் வசமானபிறகு இதுவரை சுமார் 1 லட்சம் பேர் அங்கிருந்து விமானங்கள் மூலமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆனால் தாலிபன்களுடன் செய்து கொண்ட உடன்பாட்டின்படி வரும் 31-ஆம் தேதிக்குள் படைகள் அனைத்தும் முற்றிலுமாக வெளியேற்றப்பட வேண்டும். இதற்கான காலக்கெடு நெருங்குவதால் ஆயிரக்கணக்கானோர் விமான நிலையத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கூடியிருக்கிறார்கள்.
ALSO READ | காபூல் விமான நிலையத்தில் ஒரு பாட்டில் தண்ணீர் ரூ. 3000, ஒரு தட்டு சோறு ரூ. 7500!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR