பற்றி எரியும் பாகிஸ்தான்... பொது சொத்துக்களுக்கு தீ வைப்பு... இணைய சேவைகள் முடக்கம்!
இம்ரான் கைது செய்யப்பட்டதையடுத்து, ராணுவம் மற்றும் அரசுக்கு எதிராக இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சி தொண்டர்கள் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர். இம்ரான் கான் ஆதரவாளர்கள், ராணுவ தலையகம் முதல் கவர்னர் மாளிகை வரை சென்று சூரையாடினர்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானிற்கு எதிராக, பயங்கரவாதம், மதநிந்தனை, கொலை, வன்முறையில் ஈடுபட்டது, வன்முறையைத் தூண்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக சுமார் 140-க்கு மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையில் உள்ள நிலையில், அவர் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கையால் நாடு முழுவதும் உள்நாட்டு போர் நிலவும் சூழல் உருவாகியுள்ளது. இம்ரான் கைது செய்யப்பட்டதையடுத்து, ராணுவம் மற்றும் அரசுக்கு எதிராக இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சி தொண்டர்களும் ஆதரவாளர்களும் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவாளர்கள், ராணுவ தலையகம் முதல் கவர்னர் மாளிகை வரை சென்று பல ராணுவ அதிகாரிகளின் வீடுகளையும் சூரையாடினர்.
அரசியல் ஸ்திரமின்மை
இம்ரான் கைது செய்யப்பட்டதையடுத்து பாகிஸ்தான் முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது. அரசியல் ஸ்திரமின்மை ஏற்பட்டுள்ளது. தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து கராச்சி பெஷாவர் வரையிலும், ராவல்பிண்டி, பைசலாபாத் உள்ளிட்ட பல நகரங்களிலும் கடுமையான ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. மக்களை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீர் பீரங்கிகளையும் பிரயோகித்துள்ளனர். இதனுடன், முக்கிய சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன.
பொதுச் சொத்துக்கள் சேதம்
இம்ரான் கான் கைது செய்யப்பட்ட பிறகு, அவரது ஆதரவாளர்கள் கராச்சி, லாகூர் போன்ற நகரங்களில் பொதுச் சொத்துக்களை கடுமையாக சேதப்படுத்தியதோடு, காவல்துறை வாகனங்களுக்கும் தீ வைத்துள்ளனர். இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் பந்த் கூட அறிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில், பாகிஸ்தான் மக்களைப் பற்றி பிடிஐ தெரிவித்துள்ள கருத்தில், மக்களின் விசுவாசத்தை சோதிக்கும் நேரம் இது; இம்ரான் கான் என்றென்றும் பொதுமக்களுக்கு நிற்கிறார்; எனவே பொதுமக்கள் இம்ரானுக்காக நிற்க வேண்டும் என்றார்.
இணைய சேவை முடக்கம்
பதற்றம் அதிகரித்து வருவதால், இணையம் முதல் பள்ளி-கல்லூரி வரை அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இம்ரான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில், சமூக ஊடகங்கள் மூலம் பதற்றம் அதிகரிப்பதை தடுப்பதற்காக செல்பேசி இணையம் மற்றும் பிராட்பேண்ட் சேவைகளைக் கூட ஷெஹ்பாஸ் ஷெரீப் அரசாங்கம் முற்றிலுமாக முடக்கியுள்ளது. பல இடங்களில் இதுமட்டுமின்றி, போராட்டங்களுக்கு மத்தியில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் பாதுகாப்பு கருதி மூடப்பட்டு, இன்றைய ஓ லெவல் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கைதுக்கு பாகிஸ்தான் ராணுவம் தான் காரணம்: பிடிஐ
நாசவேலை மற்றும் தீ வைப்புகளால் உருவாக்கப்பட்ட பயங்கரமான சூழ்நிலை
இம்ரான் கானின் ஆதரவாளர்கள் ராணுவம் மற்றும் அரசுக்கு எதிராக ஏராளமான முழக்கங்களை எழுப்பினர் மற்றும் இந்த கைதுக்கு பாகிஸ்தான் ராணுவம் தான் காரணம் என்று குற்றம் சாட்டினர். பிடிஐயின் இந்த ஆதரவாளர்கள் ரேடியோ பாகிஸ்தான் அலுவலகத்திற்கு தீ வைத்துள்ளனர் மற்றும் ராவல்பிண்டியில் உள்ள ஒரு பெரிய தலைமையகத்தின் பிரதான வாயிலை உடைத்துள்ளனர். பொதுமக்களின் இத்தகைய உக்கிரமான ஆர்ப்பாட்டம் நாட்டில் பெரும் உள்நாட்டு யுத்தம் ஏற்படும் அபாயத்தை சுட்டிக்காட்டுகிறது.
மேலும் படிக்க | பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது! நாடு முழுவதும் அதிகரிக்கும் பதற்றம்!
நீதிமன்றத்தின் பார்வையில் இம்ரான் கைது
இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் இம்ரான் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், விசாரணைக்குப் பிறகு, இம்ரான் கைது செய்யப்பட்டதை நீதிமன்றம் நியாயப்படுத்தியுள்ளது. மறுபுறம், நீதிமன்ற வளாகத்தில் நடந்த சண்டை மற்றும் மோதலுக்கு ஆத்திரம் தெரிவித்து, அதிகாரிகள் மீது அவமதிப்பு வழக்கு தொடரவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கனடாவும் அமெரிக்காவும் வழங்கிய எச்சரிக்கை
இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் போக்குவரத்து தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக இன்றைய அனைத்து தூதரக சந்திப்புகளையும் ரத்து செய்துள்ளது. இதுமட்டுமின்றி, பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது குடிமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறும், நெரிசலான இடங்களை தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. இதேபோல், எதிர்பாராத பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக பாகிஸ்தானில் அதிக அளவு எச்சரிக்கையுடன் இருக்குமாறு கனடா தனது குடிமக்களுக்கு பயண ஆலோசனையை வழங்கியது.
தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) என்ற கட்சியை தொடங்கிய இம்ரான்கான் 2018-ம் ஆண்டு பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் வென்று பிரதமரானார். பாகிஸ்தானில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அரசியல் ஸ்திரத்தன்மை என்பது கேள்விக் குறியாகவே இருந்து வருகிறது. அங்கே எப்போதும் ஜனநாயகம் நீடித்ததில்லை. அரசுக்கும் ராணுவத்திற்கு முரண்ட்பாடு ஏற்படும் போது, ஆட்சி கவிழ்ப்பு நடந்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றும். இதற்கு இம்ரான்கானும் விதிவிலக்கும் அல்ல. இம்ரான்கானுக்கு எதிராக தொடர்ந்து ஆட்சியை கவிழ்ப்பு முயற்சிகள் நடைபெற்று வந்தன. பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான இம்ரான் கான் அரசு பதவி விலக கோரி நாடாளுமன்றத்தில் தீர்மானங்களும் கொண்டுவரப்பட்டன. ஒருவழியாக பதவியில் இருந்து இம்ரான்கான் வெளியேற்றப்பட்ட நிலையில், அவரை கைது செய்து சிறையில் அடைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | அழிவை நோக்கி செல்லும் பாகிஸ்தான்! இம்ரான் கானால் அதிகரிக்கும் சிக்கல்கள்!
மேலும் படிக்க | அமெரிக்காவின் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு... 8 பேர் பலி... பலர் காயம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ