சமீபத்தில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி ஆசியா பயணம் சென்றிருந்தார். அவர் தனது ஆசிய பயணத்தின் போது தைவானிற்கும் பயணம் மேற்கொண்டார். நான்சி பெலோசியின் தைவான் வருகைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அமெரிக்காவை அச்சுறுத்தும் அளவுக்கு சீனா கடும் கோபமடைந்தது. இதன் பிறகு தைவானைச் சுற்றி போர் பயிற்சி கொண்டு தைவானை அச்சுறுத்தும் வேலையில் இறங்கியது. ஆனால், அமெரிக்கா விடுவதாக இல்லை. தைவானை தொடர்ந்து தற்போது மீண்டும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தைவான் சென்றுள்ளது. சீனாவின் அனைத்து அச்சுறுத்தல்களையும் புறக்கணித்த அமெரிக்கா, தைவானிற்கு ஆதரவாக நிற்பதாக கூறியது. மறுபுறம், இந்த நடவடிக்கை தனது 'ஒரே சீனா' என்ற கொள்கைக்கு எதிரான போராட்டமாக சீனா கருதுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தைவான் செல்லும் அமெரிக்க நாடாளுமன்ற குழுவிற்கு செனட்டர் மார்கி தலைமை தாங்குகிறார்.  பிராந்திய பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு மற்றும் உலகளாவிய விநியோக தொடர்பு ஆகியவற்றை பற்றிய ஆலோசனை மேற்கொள்ள இந்த பயணம் என அமெரிக்கா கூறுகிறது. தைவானில் உள்ள அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் தனது அறிக்கையில், "செனட்டர்கள் மார்கி, ஜான் கார்மென்டி, ஆலன் லோன்டல், டான் பேர் மற்றும் ஆமா அமாதா கோல்மன் ரெட்வேகன்  ஆகியோர் ஆகஸ்ட் 14 முதல் 15 வரை தைவானில் இருப்பார்கள்" என்று தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | சீனாவின் மிரட்டலை மீறி, தைவான் பயணம் மேற்கொள்ளும் நான்சி பெலோசி


அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தைவானின் உயர்மட்ட தலைமையை சந்தித்து அமெரிக்கா-தைவான் உறவுகள் குறித்தும் விவாதிக்கும். இது தவிர, பருவநிலை மாற்றம் மற்றும் பரஸ்பர நலன் தொடர்பான பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்படும். நான்சி பெலோசியின் வருகைக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதிநிதிகள் குழுவின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மறுபுறம், சீனா தொடர்ந்து தைவானை பயமுறுத்தும் வகையில் சூழ்ச்சிகளை செய்து வருகிறது.


சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கிற்கு மத்தியில், தைவான் தனது சக்தியை தொடர்ந்து அதிகரித்துக்கொள்வதாகவும், ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளுடனான தனது உறவை மேம்படுத்துவதாகவும் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. தைபே மீது தாக்குதல் நடத்த சீனா விரும்புவதாக தைவான் குற்றம் சாட்டியுள்ளது. சீனாவின் ஆத்திரமூட்டும் செயல்களால், பிராந்தியத்தில் அமைதி சீர்குலைந்து ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தைவான் கூறுகிறது.


தைவானை சீனா, தனது நாட்டின் ஒரு பகுதியாகக் கருதுகிறது, அதே நேரத்தில் தைவான் தன்னை ஒரு தன்னாட்சி நாடு என்று அறிவித்துள்ளது. நான்சி பெலோசியின் தைவான் பயணத்தை சீனா ஆட்சேபித்தது, அத்தகைய பயணம் சீனா தனது உள்விவகாரங்களில் தலையிடுவதாகக் கருதும் என்று கூறியது. சீனா பல அச்சுறுத்தல்களை விடுத்தத போதிலு,  நான்சி பெலோசி தனது பயணத்தைத் தொடர்ந்தார்.


மேலும் படிக்க | நான்சி பெலோசி தைவான் பயணம் மேற்கொண்டால்... அமெரிக்காவை மிரட்டும் சீனா


மேலும் படிக்க | துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நியூயார்க்கில் புதிய சட்டம்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ