Russia-Ukraine crisis: இந்தியர்களை வெளியேற்ற உக்ரைனுக்கு 3 ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்படும்
போர் மேகம் சூழ்ந்திருக்கும் பகுதிகளில் இருந்து இந்திய குடிமக்கள் வெளியே வர உதவும் வகையில் ஏர் இந்தியா விமான நிறுவனம்மூன்று விமானங்களை இயக்க உள்ளது
Ukraine Russia Conflict: உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் போர் மேகம் சூழ்ந்திருக்கும் பகுதிகளில் இருந்து இந்திய குடிமக்கள் வெளியே வர உதவும் வகையில் ஏர் இந்தியா விமான நிறுவனம்மூன்று விமானங்களை இயக்க உள்ளது
பதற்றம் நிறைந்திருக்கும் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் கவலைகளைகளை கருத்தில் கொண்டு இந்தியா மற்றும் உக்ரைன் இடையே மூன்று வந்தே பாரத் மிஷன் (VBM) விமானங்களை இயக்குவதாக ஏர் இந்தியா இன்று தெரிவித்துள்ளது. பிப்ரவரி 22, 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இந்த விமானங்கள் இயக்கப்படும்.
"ஏர் இந்தியா இந்தியா-உக்ரைன் (Boryspil International Airport) இடையே 22 மற்றும் 26 பிப்ரவரி 2022இல் 3 விமானங்களை இயக்கும்" என்று ஏர் இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் அறிவித்துள்ளது.
"ஏர் இந்தியா முன்பதிவு அலுவலகங்கள், இணையதளம், கால் சென்டர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் (sic) மூலம் பயணிகள் பயணச்சீட்டை முன்பதிவு செய்யலாம்" என்று அது மேலும் கூறியது.
தந்து அணுசக்தித் திறனைக் நினைவூட்டும் வகையில், மூலோபாய அணுசக்திப் படைகளின் பெரும் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான ரஷ்யாவின் முடிவினால், போர் அச்சங்கள் அதிகரிக்கும் சூழலில், இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று நடைபெறும் ஆயுதப் பயிற்சியை நேரடியாக மேற்பார்வையிடுவார் என்று கிரெம்ளின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த பயிற்சியில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் கப்பல் ஏவுகணைகளின் தொடர்ச்சியான ஏவுதல்கள் நடத்துவது ஆகியவை பயிற்சி செய்யப்படும்.
ரஷ்யாவின் இராணுவ கட்டளை மற்றும் ஊழியர்களின் தயார்நிலையையும், அதன் அணு மற்றும் வழக்கமான ஆயுதங்களின் நம்பகத்தன்மையையும் சோதிக்க, இந்த பயிற்சிக்கு நீண்ட காலத்திற்கு முன்பே திட்டமிடப்பட்ட இது என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், வெள்ளிக்கிழமை கிழக்கு உக்ரைனில் ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மாஸ்கோவின் ஆதரவுடன் ராணுவம் மற்றும் பிரிவினைவாதிகள் இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றதாக சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | Russia-Ukraine crisis: ரஷ்யா படைகளை வாபஸ் பெறவில்லை என அமெரிக்கா குற்றசாட்டு
அரசாங்கப் படைகள் மற்றும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு இடையே உள்ள லுகான்ஸ்க் பிராந்தியத்தில் தொடர்ந்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிவிலியன் கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன..
மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நேட்டோ நாடுகளிலிருந்து அமெரிக்கா அனைத்துப் படைகளையும் திரும்பப் பெற வேண்டும் என்று கோருவதன் மூலம் ரஷ்யா உக்ரைன் மீது அழுத்தத்தை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Cyber Attack: கத்தியின்றி ரத்தம் சிந்த வைக்கும் சைபர் தாக்குதல்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR