ஜெனீவா: உலக சுகாதார அமைப்பு (WHO) கடந்த வாரம் ஐரோப்பாவில் சுமார் இரண்டு மில்லியன் மக்கள் கோவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கோவிட் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து சில பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட மிக அதிக எண்ணிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த வாரம் ஐரோப்பா கண்டத்தில் சுமார் 27 ஆயிரம் இறப்புகள் பதிவாகியுள்ளன. UN செய்திகள் உலக சுகாதார அமைப்பின் தரவுகளை அறிவித்தன. WHO டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் கெப்ரேயஸ், ஜெனீவாவில் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், 'கிழக்கு ஐரோப்பாவில் குறைவான தடுப்பூசி விகிதங்களைக் கொண்ட நாடுகளில் மட்டுமல்ல, மேற்கு ஐரோப்பாவில் உலகின் மிக உயர்ந்த தடுப்பூசி விகிதங்களைக் கொண்ட நாடுகளிலும் வைரஸ் அதிகரித்து வருகிறது' என்று விளக்கினார்.


"இது மற்றொரு நினைவூட்டல். நாங்கள் மீண்டும் மீண்டும் கூறியது போல், தடுப்பூசிகள் மற்ற முன்னெச்சரிக்கைகளின் தேவையை மாற்றாது" என்று டெட்ரோஸ் கூறினார்.


"தடுப்பூசிகள் (Vaccination) மருத்துவமனைக்கு செல்வதற்கான தேவை, கடுமையான நோய் உருவாக்கம், இறப்பு ஆகிய அபாயங்களை குறைக்கின்றன. ஆனால் இவை நோய் பரவுவதை முழுமையாகத் தடுக்காது".


ALSO READ: NoroVirus: கேரளாவில் வயநாட்டில் பரவும் நோரோ வைரஸ் பாதிப்பு 


பரிசோதனை, முகக்கவசம், தனி மனித இடைவெளி, மேம்படுத்தப்பட்ட காற்றோட்டம் மற்றும் பிற நடவடிக்கைகளின் விகிதாசார பயன்பாடுகளை WHO தொடர்ந்து பரிந்துரைக்கிறது என்று UN செய்தி அறிக்கை கூறியுள்ளது.


"வெறும் தடுப்பூசியால் மட்டும் கொரோனா தொற்றுநோயை (Coronavirus) முழுமையாக வெற்றி கண்டு விடலாம் என எந்த நாடும் முடிவு செய்துவிட முடியாது" என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. 


உலகெங்கிலும் உள்ள சுகாதாரப் பணியாளர்கள், வயதானவர்கள் மற்றும் அதிக ஆபத்துள்ள குழுக்கள் இன்னும் தங்கள் முதல் டோஸிற்காக காத்திருக்கும்போது. ​​ஆரோக்கியமானவர்களுக்கு பூஸ்டர் டோஸ்களை வழங்குவது அல்லது குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் எந்த அர்த்தமுமில்லை என்று WHO தலைவர் கூறுகிறார்.


ஒவ்வொரு நாளும், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் அளிக்கப்படும் முதல் டோஸ்களை விட ஆறு மடங்கு அதிகமான பூஸ்டர் டோஸ்கள் அளிக்கப்படுகின்றன. இது "இப்போதே நிறுத்தப்பட வேண்டிய ஊழல்" என்று டெட்ரோஸ் விவரித்தார்.


தடுப்பூசிகளுக்கு சமமான அணுகலை இலக்காகக் கொண்ட UN தலைமையிலான உலகளாவிய முன்முயற்சியான COVAX பற்றிய புதுப்பிப்பையும் டெட்ரோஸ் வழங்கியுள்ளார்.


ALSO READ: கோவிட் தொற்றுநோயால் இன்னும் 1 லட்சம் பேர் இறப்பார்கள்: எச்சரிக்கும் நிபுணர்கள் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR