லண்டனில் உள்ள மேம்பட்ட முக ஒப்பனை மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மையத்தைச் சேர்ந்த டாக்டர் ஜூலியன் டி சில்வா, அறிவியலின் படி உலகின் மிக அழகான பெண் ஆம்பர் ஹெர்ட் என்று அறிவித்தார்.  டாக்டர் ஜூலியன் டி சில்வா, 2016 ஆம் ஆண்டில், உலகின் மிக அழகான முகம் யாருடையது என்பதைக் கண்டறிய 'PHI' என்ற பழங்கால முக மேப்பிங் நுட்பத்தைப் பயன்படுத்தினார்.  மேலும் அவரது ஆராய்ச்சிக்குப் பிறகு, நடிகர் ஆம்பர் ஹியர்ட் 'உலகத்திலேயே மிக அழகான பெண்' என்றும் மற்றும் 'தி பேட்மேன்' நடிகர் ராபர்ட் பாட்டின்சன் 'உலகின் மிக அழகான மனிதர்' என்றும் கூறப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | விண்வெளியில் ஈரத்துணியைப் பிழிந்தால் என்னவாகும்? வைரலாகும் வீடியோ


டாக்டர் சில்வா இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி, 'அக்வாமேன்' நடிகரின் முகம் கிரேக்க கோல்டன் ரேஷியோவிற்கு 91.85 சதவிகிதம் துல்லியமாக இருப்பதைக் கண்டறிந்து, அவரை உலகின் மிக அழகான பெண்மணியாக ஆக்கினார்.  அதைத் தொடர்ந்து கிம் கர்தாஷியன் 91.39 சதவிகிதம் மற்றும் கெண்டல் ஜென்னர்  90.18 சதவீதத்துடன் ஐந்தாவது இடத்தில் உள்ளனர். 



ராபர்ட் பாட்டின்சன் 92.15 சதவீத துல்லியத்துடன் உலகின் மிக அழகான மனிதர் என்றும், 'மேன் ஆஃப் ஸ்டீல்' நடிகர் ஹென்றி கேவில் 91.64 சதவிகிதம் துல்லியமாகவும், பிராட்லி கூப்பர் மற்றும் பிராட் பிட் 90.55 சதவிகிதம் மற்றும் 90.51 சதவிகிதம் பெற்று இருவரும் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளனர்.


மேலும் படிக்க | தாய்லாந்து சுற்றுலா செல்ல திட்டமா; இந்த செய்தி உங்களுக்குத் தான்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR