ஜப்பானில் உள்ள USA படைகளுக்காக கூடுதல் பணம் செலுத்த வேண்டும் என அமெரிக்கா கேட்கவில்லை
ஜப்பானில் உள்ள அமெரிக்க துருப்புகளுக்காக, அந்நாட்டிடம் இருந்து ஆண்டுதோறும் 8 பில்லியன் அமெரிக்க டாலர் வாங்க வேண்டும் என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியதாக அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் போல்டன் கூறினார்.
ஜப்பானில் உள்ள அமெரிக்க படைகளுக்காக கூடுதல் பணம் செலுத்த வேண்டும் என அமெரிக்கா கேட்கவில்லை என ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் டாரோ கோனோ கூறியுள்ளார். ஜப்பானில் உள்ள அமெரிக்க துருப்புகளுக்காக, அந்நாட்டிடம் இருந்து ஆண்டுதோறும் 8 பில்லியன் அமெரிக்க டாலர் வாங்க வேண்டும் என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தன்னிடம் கூறியதாக அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் போல்டன் கூறியதாக வந்த செய்தியை அடுத்து ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இதை தெளிவுபடுத்தியுள்ளார்.
Also read |வெளிநாட்டு பணியாளர்களுக்கான H-1B விசா ரத்து... 85,000 இந்தியர்களின் நிலை ஆபத்தில்...
ஜப்பானில் உள்ள அமெரிக்க துருப்புகளுக்காக, பணம் செலுத்துவது பற்றிய பேச்சு வார்த்தை எதுவும் தொடங்கவில்லை என, செவ்வாய் கிழமை அன்று நடைபெற்ற வழக்கமான பத்திரிக்கை கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சர் டாரோ கோனோ (Taro Kono) தெரிவித்தார். இது தொடர்பாக, அமெரிக்க அரசிடம் இருந்து எந்த ஒரு கோரிக்கையும் வரவில்லை என அவர் கூறினார்.
ஜப்பானில் உள்ள 54,000 அமெரிக்க துருப்புகள் தொடர்பான தற்போது நடைமுறையில் உள்ள ஒப்பந்தம், 2021 மார்ச் மாதம் நிறைவடைகிறது.
போல்டன் தான் எழுதிய "The Room Where It Happened: A White House Memoir", என்ற புத்தகத்தில், கடந்த ஜூலை மாதம் தனது ஜப்பான் பயணத்தின் போது, அங்குள்ள அமெரிக்க துருப்புகளுக்காக, ஆண்டு தோறும் 8 பில்லியன் அமெரிக்க டாலர் செலுத்த வேண்டும் என்ற ட்ரம்பின் கோரிக்கையை ஜப்பானின் மூத்த அதிகாரியிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
ALSO READ | ஜூலை 7 முதல் சுற்றுலாப் பயணிகளை மீண்டும் வரவேற்கத் தயாராகும் Dubai
இது குறித்து கருத்து தெரிவித்த ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் கோனோ (Kono), அமெரிக்க- ஜப்பான் உறவு பிராந்தியத்தில் அமைதிக்கும், ஸ்திர தன்மைக்கும் முக்கியம் என்றும், பரஸ்பரம் நன்மை தராத எந்த ஒரு விஷயமும் நீண்ட நாளைக்கு நீடிக்காது என்றார். போல்டன் எழுதிய புத்தகத்தை தான் பார்க்காததால், அது குறித்து தான் கருத்து ஏதும் தெரிவிக்க இயலாது என்றும் குறிப்பிட்டார்.