வாஷிங்டன்(washington): நவம்பர் 3 ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதிபர் தேர்தலில் தோல்வியுற்றால், அமைதியான முறையில் அதிகாரப் பரிமாற்றம் ஏற்படுமா என கேட்டதற்கு, என்ன நடக்கிறது என பிறகு பார்க்கலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) , நேரிடையாக பதிலளிக்க மறுத்துவிட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மின்னஞ்சல் அல்லது தபால் மூலம் வாக்களிப்பது (மெயில்-இன்-வாக்கு) தொடர்பான சந்தேகங்களை  வெளிபடுத்திய அவர் அதில் மோசடி நடக்கும் வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டார்.


புதன்கிழமை வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தேர்தலில் தோல்வியடைந்தால், வெள்ளை மாளிகையை விட்டு அமைதியாக வெளியேறுவீர்களா என்று டிரம்ப்  இடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த டிரம்ப், "என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" என்றார்.


மின்னஞ்சல் அல்லது தபால் மூலம் வாக்களிப்பது ( Mail-in-Ballot) குறித்து நான் தொடர்ந்து புகார் அளித்து வருகிறேன், அது ஒரு பெரிய மோசடி" என்று டிரம்ப் கூறினார். 


மேலும் படிக்க | Donald Trump-ற்கு வந்த விஷம் தடவிய கடிதம்... விசாரணையில் இறங்கிய அமெரிக்க FBI..!!!


ட்ரம்பின் பதிலில் திருப்தி அடையாத பத்திரிகையாளர், 'தோற்றால் அதிகாரத்தை அமைதியான விட்டுக் கொடுப்பதற்கு நீங்கள் உறுதியளிக்கிறீர்களா?' என்று கேட்டார். அதற்கு பதிலளித்த டிரம்ப் மீண்டும், மீண்டு ஆட்சிக்கு வருவோம் என நம்பிக்கை வெளியிட்டார்.


”உண்மையைச் சொல்வதானால், இந்த அரசாங்கம் நீடிக்கும்” எனக் கூறி இது தொடர்பாக தன்னிடம் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரின் கேள்விகளுக்கு பதிலளிக்க டிரம்ப் மறுத்துவிட்டார்.


 டிரம்ப்பின் கருத்துக்கள் குறித்து பதிலளித்த, முன்னாள் துணைத் தலைவரும் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான ஜோ பிடன் (Joe Biden), "நாம் எந்த நாட்டில் இருக்கிறோம்? அவர் மிகவும் பகுத்தறிவற்ற முறையில் பேசியுள்ளார். இதைப் பற்றி என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை?” எனக் கூறியுள்ளார்.


ட்ரம்ப்பின் இந்த பதில் அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க | பிரிவினையில் தொலைந்தவரின் கண்ணீர் வாழ்வு....WhatsApp அழைப்பால் இணைந்தது உறவு..!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR