Donald Trump-ற்கு வந்த விஷம் தடவிய கடிதம்... விசாரணையில் இறங்கிய அமெரிக்க FBI..!!!

வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்ட விஷம் தடவிய கடிதம் தொடர்பாக விசாரணையில் அமெரிக்க உளவுத்துறையின் உதவியை காவல் துறை நாடியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 20, 2020, 09:46 AM IST
  • வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்ட விஷம் தடவிய கடிதம் தொடர்பாக விசாரணையில் அமெரிக்க உளவுத்துறையின் உதவியை காவல் துறை நாடியுள்ளது.
  • ஆமணக்கு பீன்ஸில் ரிசின் என்னும் விஷம் இயற்கையாகவே காணப்படுகிறது.
  • ஒரு மிகச்சிறிய கடுகின் அளவு ரிசின் உட்கொண்டால் கூட, 36 முதல் 72 மணி நேரத்திற்குள் மரணம் ஏற்படும்.
Donald Trump-ற்கு வந்த விஷம் தடவிய கடிதம்... விசாரணையில் இறங்கிய அமெரிக்க FBI..!!! title=

வாஷிங்டன் / ஒட்டாவா: வெள்ளை மாளிகைக்கு (White house) அனுப்பட்ட சந்தேகத்திற்கிடமான கடிதம் ஒன்றை அமெரிக்க அதிகாரிகள் சோதனை செய்தனர். கனடாவிலிருந்து அனுப்பப்பட்டதாகத் தோன்றும் அந்த கடிதத்தில்,  கொடிய விஷமான ரிசின் (ricin)  இருப்பதை போலீஸார் கண்டறிந்தனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் (US Presidential Election) நெருங்கி வரும் நிலையில் இந்த விஷயம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 "வெள்ளை மாளிகைக்கு  (White house) அனுப்பப்பட்ட சந்தேகத்திற்கிடமான கடிதம் தொடர்பாக விசாரணை செய்ய அமெரிக உளவுத்துறை  FBI- இடம் உதவி கோரப்பட்டுள்ளது" என்று கனடா போலீஸான ராயல் கேனடியன் மவுண்டட் போலீஸ் உறுதிப்படுத்தியது.

 "கடித உறையில் காணப்படும் பொருள் குறித்து அமெரிக்க உளவுத்துறை ஒரு பகுப்பாய்வு நடத்தியது. அப்போது ரிசின் என்ற நச்சுப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டது"  என கனடா (Canada) காவல் துறை கூறியுள்ளது.

கடிதம் வெள்ளை மாளிகைக்கு வருவதற்கு முன்பாகவே, விஷம் இருப்பது கண்டறியப்பட்டு, தற்போது, ஒரு அரசு அஞ்சல் மையத்தில் உள்ளது.

அமெரிக்க (America) தபால் துறை மற்றும் அமெரிக்க உளவுத்துறை இணைந்து, சந்தேகத்திற்கு இடமான  கடிதம் தொடர்பாக விசாரித்து செய்து வருகின்றனர் என்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை எனவும் உயர் மட்ட அதிகாரிகள் கூறினர்.

வெள்ளை மாளிகை மற்றும் அமெரிக்க உளவு அமைப்பு ஆகியவை கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன.

ஆமணக்கு பீன்ஸில் ரிசின் என்னும் விஷம் இயற்கையாகவே காணப்படுகிறது. ஆனால் அதில் உள்ள ரிசினை, ஒரு விஷமாக, ஒரு உயிரியல் ஆயுதமாக மாற்ற தனிப்பட்ட செயல்முறையை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறப்படுகிறது. ஒரு மிகச்சிறிய கடுகின் அளவு ரிசின் உட்கொண்டால் கூட, 36 முதல் 72 மணி நேரத்திற்குள் மரணம் ஏற்படும். இதற்கான மாற்று மருந்து எதுவும் இல்லை.

அமெரிக்க அதிகாரிகளுக்கு பல முறை ரிசின் தடவப்பட்ட கடித உரைகள் இதற்கு முன்னும் வந்துள்ளன.

ALSO READ | US-ல் டிக் டாக் தொடர்ந்து செயல்பட டொனால்ட் டிரம்ப் அனுமதி..!

2018 ஆம் ஆண்டில், உட்டா பகுதியை சேர்ந்த வில்லியம் கிளைட் ஆலன் III என்ற நபர், ட்ரம்ப் மற்றும் அமெரிக்க உளவுத் துறை இயக்குனர் கிறிஸ்டோபர் வேர் உள்ளிட்ட பிற உயர் அதிகாரிகளுக்கு ரிசின் தடவப்பட்ட கடிதங்களை அனுப்புவதாக அச்சுறுத்தல்களை விடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டார். ஆலன் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அதிபர்  பராக் ஒபாமாவிற்கு (Barack Obama) ரிசின் தடவப்பட்ட  கடிதங்களை அனுப்பிய இரு தனித்தனி சம்பவங்களில் இரண்டு பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர்.

மே 2014 இல், மிசிசிப்பியை சேர்ந்த, ஜேம்ஸ் என்பவர், ஒபாமாவிற்கு கொடிய விஷப்பொருளுடன் கடிதங்களை அனுப்பியதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார், 

ஜூலை 2014 இல், டெக்சாஸ் பகுதியை சேர்ந்த நடிகருக்கு ஒருவர், ஒபாமா மற்றும் முன்னாள் நியூயார்க் மேயர் மைக்கேல் ப்ளூம்பெர்க் ஆகியோருக்கு விஷம் தடவிய கடிதங்கள் அனுப்பியதற்காக 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ALSO READ | சண்டை போட்டு ஜெயிக்க முடியலை.. பாட்டு பாடியாவது ட்ரை பண்ணலாம் என்கிறது சீன படை..!!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News