சீனா இந்தியாவிற்கு தொடர்ந்து பிரச்சனை கொடுத்து வரும் நிலையில், அமெரிக்கா தனது இராணுவ துருப்புக்களை அனுப்புவது குறித்து  அமெரிக்கா ஆராய்ந்து வருவதாக, அமெரிக்க வெளிறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனா( China) இந்தியாவிற்கு மட்டுமல்ல , மலேசியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற ஆசிய நாடுகளுக்கும் சீனா ஒரு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. இதனால், உலகம் முழுவதும், தனது துருப்புக்களை அனுப்புவது குறித்து அமெரிக்கா மறுஆய்வு செய்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ வியாழக்கிழமை தெரிவித்தார்.


ALSO READ | சீனா, நேபாளத்தை அடுத்த தற்போது பூட்டானும் இந்தியாவின் தலைவலியாக மாறுகிறதா?


வாஷிங்டன் (Washington):  ஆசிய(Asia) பிராந்தியத்தில் சீனா ஒரு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்றால் மிகையல்ல. அது தனது அண்டை நாடுகளுக்கு பிரச்சனையை கொடுத்து வருகிறது. அதனால், அனைத்து இடங்களுக்கு தனது படைகளை அனுப்புவது குறித்து அமெரிக்கா யோசித்து வருகிறது. இதனால், தேவைப்பட்டால், சீனா இராணுவத்தை எதிர் கொள்ளும் போது, அமெரிக்க படைகளை பயன்படுத்திக் கொள்ள இயலும்.


ஜெர்மன் மார்ஷல் நிதி (German Marshall Fund) நடத்திய 2020 ஆம் ஆண்டின், மெய்நிகர் கூட்டத்தில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது, பாம்பியோ இதனை கூறினார். சீன இராணுவம் அதாவது PLA - வை எதிர்கொள்ளக்கூடிய வகையில் படைகளை அனுப்புவது குறித்து ஆய்வு செய்து வருவதாக், மைக் பாம்பியோ தெரிவித்தார். இது பெரும் சவாலான நேரம் என்றும், இந்த நேரத்தில், அதை சமாளிக்க அனைத்து வகையிலும் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.


ALSO READ | தீவிரவாதி ஒசாமா பின்லேடனுக்கு தியாகி பட்டம் சூட்டிய பாகிஸ்தான் பிரதமர்


அமெரிக்க (America) அதிபர் டொனால்ட் டிரம்பின் அறிவுறுத்தலின் பேரில், அமெரிக்க துருப்புக்களை  உலகின் பல பகுதிகளுக்கு அனுப்புவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும்,  இதை செயல்படுத்தும் வகையில், ஜெர்மனியில் உள்ள அமெரிக்க துருப்புக்களின் எண்ணிக்கையை 52 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாக குறைத்து வருவதாகவும் அவர் கூறினார்.


களத்தில் உள்ள நிலையை கருத்தில் கொண்டு துருப்புக்களை அனுப்புவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கூறினார்.  எந்த எந்த நாடுகளுக்கு எந்த அளவிற்கு சீனாவினால் அச்சுறுத்தல் உள்ளன, எந்த அளவிற்கு உதவி தேவைப்படும் என்ற அடிப்படையில், கள நிலவரம் ஆராயப்பட்டு, அதன் அடிப்படையில் படையினரை  அனுப்புவது குறித்து ஆலோக்கப்படும் என மைக் பாம்பியோ தெரிவித்தார்.


 இந்தியாவின் (India) வலிமையுடன், மற்ற நாடுகளின் உதவியும் ஆதரவும்  கிடைக்கும் என்ற நிலையில், சீனா  மிகவும் பீதியில் உள்ளது.