Pegasus: உளவு பார்த்ததாக கூறவில்லை என அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அடித்த பல்டி
அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இஸ்ரேல் NSO நிறுவனத்தின் உளவு தொடர்பாக தொலைபேசி பதிவுகளின் ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளது என்ற கூறிய நிலையில், இப்போது யு-டர்ன் எடுத்துள்ளது.
Pegasus Spyware: பெகாசஸ் ஸ்பைவேர் என்னும் உளவு பார்க்கும் மென்பொருள் பற்றிய செய்திகள் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்தியாவைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்கள், எதிர்கட்சித் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள், நீதிபதிகள் போன்றோரின் தொலைபேசி எண்கள் கண்காணிக்கபட்டுள்ளதாக வந்துள்ள தகவல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
பெகாசஸ் ஸ்பைவேர் என்பது இஸ்ரேலை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பிரபல ஸ்பைவேர் நிறுவனமான NSO உருவாக்கிய ஒரு செயலி (App). இது உளவு பணிகளுக்காகவே உருவாக்கப்பட்ட செயலி.
இந்நிலையில், அம்னஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International), இஸ்ரேல் என்எஸ்ஓ நிறுவனத்தின் உளவு தொடர்பாக தொலைபேசி பதிவுகளின் ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளது என்ற கூறிய நிலையில், இப்போது யு-டர்ன் எடுத்துள்ளது.
நேற்று வரை, "பெகசஸ் மென்பொருளைக் கொண்டு ஐம்பதாயிரம் பேர் உளவு பார்க்கப்பட்டனர் என்று கூறிய ஆம்னெஸ்டி இப்போது, "நாங்கள் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் உளவு பார்த்ததாக சொல்லவில்லை. உளவு பார்க்க வாய்ப்பு என்று தான் சொன்னோம்" என அந்தர் பல்டி அடித்துள்ளது.
ALSO READ | Pegasus Spyware: உளவு பார்க்கும் ஸ்பைவேர் குறித்த பகீர் தகவல்கள்
அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International), "உளவு பார்க்கபட்டதாக வெளியான தொலைபேசி எண்களின் பெயர் உள்ள பட்டியல், என்எஸ்ஓ நிறிவனத்திற்கும் தொடர்பு உள்ளது என்று ஒருபோதும் கூறவில்லை என யு-டர்ன் அடித்துள்ளது. அம்னஸ்டி இன்டர்நேஷனல் 'என்எஸ்ஓ பெகாசஸ் ஸ்பைவேர் பட்டியல்' என்ற எந்த தகவலையும் ஒருபோதும் வழங்கவில்லை என கூறியதாக இஸ்ரேலிய ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.
முன்னதாக, அம்னெஸ்டி இண்டர்நேஷனல் நிறுவனம் சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின், மொபைல் சாதனங்களின் மீது நடத்திய தடயவியல் ஆய்வில், என்எஸ்ஓ குழுமம் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை தொடர்ச்சியாக சட்டவிரோதமான முறையில் கண்காணிப்பை மேற்கொண்டதாக ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.
இப்போது, உளவு பார்க்கும் சாத்தியம் உள்ளதாக கூறினோமே தவிர உளவு பார்க்கப்பட்டதாக கூறவில்லை என பல்டி அடித்துள்ளது அம்னெஸ்டி இண்டர்நேஷனல்.
அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு இந்தியாவில் பணவர்த்தனைகளில் மோசடி செய்ததன் காரணமாக இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிற்கு எதிராக அடிக்கடி போலி செய்திகளை வயர் இணையதளம் வெளியிட்ட , இந்த ஆதரமில்லாத செய்தியை ஊடகங்கள் பெரிது படுத்தியத்தில் இருந்து, உலக நாடுகள் மத்தியில் இந்தியாவிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் செய்த சதி செயலாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
ALSO READ | Pegasus Spyware-ன் இலக்கில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள்: பகீர் தகவல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR