பெய்ஜிங்: உலகுக்கு கொரோனாவை அளித்துவிட்டு, தான் மட்டும் தன் பணிகளை சப்தமில்லாமல் பார்த்துக்கொண்டிருகிறது சீனா. அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பத் தொடங்கிவிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு COVID-19 நோயாளிகள் அதிகமாக இருந்ததால் தற்காலிகமாக மூடப்பட்ட பின்னர் பெய்ஜிங்கின் (Beijing) ஜின்ஃபாடி மொத்த சந்தை சனிக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.


சனிக்கிழமையன்று 112 ஹெக்டேர் பரப்பளவுள்ள சந்தையில் 1,000 க்கும் மேற்பட்ட லாரிகள் சுமார் 13,000 டன் பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது அந்த சந்தையின் வழக்கமான வர்த்தக பரிவர்த்தனை அளவுகளில் 60 சதவீதமாக இருக்கும் என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் சந்தை முழுமையாக செயல்படும் என்று சந்தை அமைந்துள்ள ஃபெங்டாய் மாவட்டத்தின் நிர்வாக துணைத் தலைவர் ஜாவ் சின்சூன் தெரிவித்துள்ளார்.


ஜூன் 13 ஆம் தேதி மூடப்படுவதற்கு முன்னர், பெய்ஜிங்கின் மொத்த காய்கறிகளில் 70 சதவீதமும், அதன் பன்றி இறைச்சியில் 10 சதவீதமும், அதன் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சியில் 3 சதவீதமும் அளிக்கும் சந்தையாக ஜின்ஃபாடி இருந்தது.


சந்தை மீண்டும் திறந்த பிறகு, சில்லறை வணிகம் நிறுத்தப்பட்டு, தனிப்பட்ட நுகர்வோருக்கும் தடை விதிக்கப்படும். அனைத்து விற்பனையாளர்களும் வாங்குபவர்களும் சந்தையில் நுழைவதற்கு முன்பு உண்மையான பெயர் அங்கீகார செயல்முறையை பூர்த்தி செய்ய வேண்டும் என்று ஷோ கூறினார்.


ALSO READ: Brazil-லிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிக்கனில் கொரோனா வைரஸ்: சீனா பகீர் தகவல்!!


அருகிலுள்ள குடியிருப்பாளர்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்காக மொத்த சந்தைக்கு வெளியே 1,000 சதுர மீட்டர் சில்லறை காய்கறி சந்தை அமைக்கப்பட்டுள்ளது.


ஜூன் 11 முதல், ஜின்ஃபாடி மொத்த சந்தையில் (Xinfadi wholesale Market) ஏற்பட்ட பல தொற்றுகளை அடுத்து, பெய்ஜிங்கில் 335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


ஆகஸ்ட் 6 க்குள், அனைத்து நோயாளிகளும் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி விட்டனர். இந்தப் பின்னணியில் தற்போது மீண்டும் இந்த சந்தை சில நிபந்தனைகளுடன் திறக்கப்படவுள்ளது. 


ALSO READ: சீனாவின் Sinopharm-ன் கொரோனா தடுப்பு மருந்து: ஆராய்ச்சியாளர்கள் கருத்து என்ன..!!!