ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 41 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து முர்மன்ஸ்க் கிளம்பிய சுகோய் சூப்பர்ஜெட் 100 விமானம் அவசரமாக தரையிறங்கும் போது தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பயணிகள் மொத்தம் 41 பேர் பலியாகினர்.


இந்திய நேரப்படி காலை 3 மணியளவில் கிளம்பிய சூப்பர்ஜெட் விமானத்தில் 78 பயணிகள் மற்றும் 5 விமான பணியாளர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த விமானம் மாஸ்கோவின் ஷெர்மெட்யெவோ விமான நிலையத்தில் இருந்து கிளம்பியது. கிளம்பிய சிறிது நேரத்தில் விமானத்தில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. விமான கட்டுப்பாட்டு அறையின் உதவியோடு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.


தரையிறங்கி விமானம் ஓடு பாதையில் சென்று கொண்டிருக்கும் போதே திடீரென தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து விமானத்தின் அவசர வழி மூலமாக பயணிகள் வெளியேற்றப்பட்டனர். எனினும் விமானத்தில் பயணம் செய்தவர்களில் 2 குழந்தைகள் உட்பட 41 பேர் பலியானதாக தகவல் வெளியாகி இருக்கிறது.