போதை பொருட்கள், ஆள் கடத்தல் போன்ற சம்பவங்களுக்காக பலர் தண்டிக்கப்பட்ட சம்பவம் குறித்து கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அமெரிக்காவில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் நடந்துள்ளது.  கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஒருவர் கிரீன்ஹவுஸ் வாயுக்களை (GHGs) கடத்தியதற்காக சட்டத்தின் பீடியில் சிக்கியுள்ளார். அமெரிக்காவில் மைக்கேல் ஹார்ட் (Michael Hart ) என்பவர் மெக்சிகோவில் இருந்து தடை செய்யப்பட்ட குளிர்பதனப் பொருட்கள் அல்லது குளிரூட்டிகளைக் கொண்ட கலன்களை வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பொதுவாக காலாவதியான ஏர் கண்டிஷனிங் யூனிட்கள் மற்றும் குளிர்சாதனப்பெட்டிகளில் பயன்படுத்தப்படுகிறது. அவற்றை தனது காரில் மறைத்து வைத்து, கடத்தி வந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிரிமினல் வழக்காக கருத வேண்டும் என எழுந்த கோரிக்கை


கலிபோர்னியாவின் தெற்கு மாவட்டத்திற்கான அமெரிக்க வழக்கறிஞர், தாரா மெக்ராத் என்பவர், பருவ நிலை மாற்றத்திற்கு முக்கிய காரணியாக விளங்கும் பசுமை இல்ல வாயுக்கள் இருக்கும் நிலையில், இதனை தடுப்பதற்கான நடவடிக்கையை வலியுறுத்தி, "சட்டவிரோதமாக, சுற்றுசூழலை பாதிக்கும், கிரீன்ஹவுஸ் வாயுக்களை இறக்குமதி செய்ததற்காக நீதித்துறை ஒருவரைத் தண்டிப்பது இதுவே முதல் முறை. இது போன்ற நடவடிக்கைகள் மேலுல் எடுக்கப்படும்" என்றார். மேலும், நச்சுக்கள் மற்றும் காற்று மாசுபாட்டின் மோசமான விளைவுகளிலிருந்து பூமியை பாதுகாக்க, இதனை கிரிமினல் வழக்காக எடுத்துக் கொண்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அனைத்து விதமான நடைமுறைகளையும் பயன்படுத்தி இது போன்ற நடவைக்கைகள் ஹடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று, கூறிய சுற்று சூழல் பாதிக்கப்படாமல் தடுக்க வேண்டியதன் அவசியத்தை மெக்ராத் எடுத்துரைத்தார்.


மைக்கேல் ஹார்ட் மீதான குற்றசாட்டு


கலிஃபோர்னியாவை சேந்த 58 வயதான ஹார்ட், மார்ச் 4 அன்று சான் டியாகோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தடைசெய்யப்பட்ட குளிர்பதனப் பெட்டிகளின் ஏராளமான கலன்களை கடத்தியதாகவும், சட்டவிரோதமாக விற்பனை செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. கடத்திய கிரின் ஹவுஸ் வாயுக்களை OfferUp மற்றும் Facebook Marketplace போன்ற தளங்கள் மூல விற்பனை செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | இந்தியாவுடனான உறவில் எவ்வித முன்னேற்றமும் இருக்காது: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம்


தடைசெய்யப்பட்ட குளிர்பதனப் வாயுக்களின் விபரம்


HFC என அழைக்கப்படும் ஹைட்ரோ புளோரோ கார்பன்கள் மற்றும் HCFC 22 என அழைக்கப்படும் ஹைட்ரோ குளோரோ புளோரோ கார்பன் வாயுக்களின் மாறுபாடுகள் அடங்கிய வாயுக்கள் கடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த இரசாயனங்கள் 1990 களில் குளோரோஃப்ளூரோகார்பன்களுக்கு (Chlorofluorocarbons - CFCs) மாற்றாக பயன்படுத்துவதில் முக்கியத்துவம் பெற்றன. குறிப்பாக அண்டார்டிகா மீதான் ஓசோன் படலம் பெரிதும் பாதிக்கப்பட்டதை தொடந்து இவை மாற்றாக பயன்படுத்தப்பட்டன.


சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தல்


ஹார்ட்டின் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் சதி, சட்டவிரோதமாக ஒழுங்குபடுத்தப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்தல் மற்றும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தல் போன்ற குற்றச்சாட்டுகள் அடங்கும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் $250,000 அபராதம் விதிக்கப்படும் என கூறப்படுகிறது. குற்றவியல் நடவடிக்கை மூலம், இதன் மூலம் ஈட்டிய பணமும் பறிமுதல் செய்யப்படும். இந்த வழக்கு தொடர்பான அடுத்த நீதிமன்ற விசாரணை மார்ச் 25ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | Lok Sabha Election 2024: மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிப்பு... தமிழ்நாட்டில் எப்போது தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ