பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக, ஷெபாஸ் ஷெரீப் 2வது முறையாக, இரு வாரங்களுக்கு முன்பு மீண்டும் பதவி ஏற்றுக் கொண்டார். பாகிஸ்தான் நாடு கடந்த சில ஆண்டுகளாக விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி, அரசியல் குழப்பங்கள் ஆகியவற்றால் பாதிப்படைந்து உள்ள நிலையில், கடந்த பிப்ரவரி 8ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பொதுவாக தேர்தல் என்பது அங்கு ஒரு சம்பிரதாயமே. தேர்தலில், ராணுவத்தின் ஆசி பெற்றவர் தான் வெற்றி பெறுவார்கள். ஆனால், இந்த முறை ராணுவம் கோட்டை விட்டது.
ராணுவத்தின் அடக்குமுறையையும் மீறி, இம்ரான்கானின் கட்சியை ட்சேர்ந்த வேட்பாளர்கள், சுயேச்சையாக போட்டியிட்டு அதிக இடங்களில் வெற்றி பெற்றனர். எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி இல்லாத சூழலில், நீண்ட இழுபறிக்கு பின்னர் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இதன்படி, பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்று கொண்டார். இந்நிலையில், பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் எதிர்காலத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்று ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் பாகிஸ்தானில் அமைக்கப்பட்டுள்ள புதிய அரசு எண்ணுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானின் (Pakistan) வெளியுறவு அலுவலகம் பிரதமருக்கு அளித்துள்ள சமீபத்திய தகவல்கள் இதைக் கூறுகின்றன.
இதில், வெளிநாடுகளிடம் பாகிஸ்தான் கடன் பெறும் சவாலான சூழல் அதிகரித்த நிலையில், அதுபற்றி குறிப்பிட்டு பிரதமர் ஷெரீப் பேசும்போது, நட்பு நாடுகளிடம் இருந்து கடன் வாங்காமல், முதலீடுகளை ஈர்க்க கவனம் செலுத்துவேன் என குறிப்பிட்ட நிலையில், பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களில் இருந்து பலவேறு விஷயங்கள் தொடர்பாக விளக்கங்களை கோரியுள்ளார். அண்டை நாடுகள் உடனான உறவுகள் விளக்கங்கள் கோரப்பட்ட நிலையில், முன்னதாக, பாகிஸ்தானின் வெளியுறவு மந்திரி ஜலீல் அப்பாஸ் ஜிலாய் மற்றும் வெளியுறவு செயலாளர் சைரஸ் காசி ஆகியோர் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பை சந்தித்து, இந்தியாவுடனான உறவுகள் உட்பட வெளியுறவுக் கொள்கை சவால்கள் குறித்து விளக்க அளித்தனர். இந்த வார தொடக்கத்தில், ஷெரீப் அரசாங்கத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட வெளியுறவு மந்திரி இஷாக் மேலும் சில தகவல்களை அளித்துள்ளார்.
மேலும் படிக்க | அணு ஆயுதப் போருக்கு ரஷ்யா தயாராக உள்ளது.... மேலை நாடுகளை எச்சரிக்கும் புடின்!
தற்காலிக வெளியுறவு மந்திரி மற்றும் வெளியுறவு செயலாளர் இருவரின் கருத்துக்களும், பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் இந்தியாவுடனான உறவுகளில் எந்தவிதமான முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையும் இல்லை என்பதைக் காட்டுகிறது. இஷாக் அளித்த பேட்டியில், இந்தியாவுக்கு எதிராக விஷம் கக்கப்பட்டுள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் அரசாங்கத்தின் கீழ், இந்தியா "இந்துத்துவா கொள்கையை" பின்பற்றுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவை "இந்து ராஷ்டிரா"வாக மாற்ற மோடி அரசு செயல்படுகிறது என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம். புதிய வெளியுறவுத்துறை அமைச்சரின் கீழ் தனது பழைய பிரச்சாரத்தை மீண்டும் செய்தது. இத்தகைய சூழ்நிலையில், மோடி ஆட்சியில் உறவுகள் மேம்படும் என்ற நம்பிக்கை இல்லை என கூறப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா உறுதியான முறையில் செயல்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சகம் தனது கருத்தில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள இந்திய தேர்தலில் பாஜக அரசு தோற்கடிக்கப்பட்டால் இந்த நிலை மாறலாம் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கருதுகிறது.
பாகிஸ்தான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷெபாஸ் ஷெரீப்புக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் மோடியின் வாழ்த்து பாகிஸ்தானில் அதிகம் பேசப்பட்டது. ஷெபாஸ் ஷெரீப் பிரதமர் மோடியின் செய்திக்கு பதிலளிக்க இரண்டு நாட்கள் எடுத்துக்கொண்டார். அதோடு, அவரது பதில் மிகவும் சுருக்கமாக இருந்தது.
மேலும் படிக்க | Zee News தேர்தல் கருத்துக்கணிப்பு: மோடி vs ராகுல்... அரியணை ஏறப்போவது யார்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ