பிரபலமான டிக்டாக் செயலியின் ஆபத்தான விளையாட்டுகளுக்கு மேலும் இரு சிறுமிகள் பலியான விஷயம் அனைவரையும் உலுக்கியுள்ளது. சீனாவின் பிரபல செயலியான டிக்டோக், சில நேரங்களில் ஆபத்தான விளையாட்டு சவால்களை போட்டியாக வைக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விளையாட்டு விபரீதமாகும் என்பதை டிக்டாக் பலமுறை நிரூபித்திருக்கிறது. இந்த செயலியில் இடம்பெறும் சவால்களினால் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவது கவலையை அதிகரித்திருக்கிறது.


அமெரிக்காவில் டிக்டாக்கின் "பிளாக் அவுட் சேலஞ்ச்" நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட இரண்டு சிறுமிகள் இறந்த நிலையில், அவர்களின் பெற்றோர்கள், டிக்டாக் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.


டிக்டாக் மென்பொருள் "வேண்டுமென்றே மற்றும் மீண்டும் மீண்டும்" பிளாக்அவுட் சவாலை முன்வைப்பதாக குற்றம் சாட்டி, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மாகாண நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | ஷின்சோ அபேவை கொன்றது ஏன்? - கொலையாளியின் பரபரப்பு வாக்குமூலம்!


பெற்றோரின் சார்பில் இந்த வழக்கை தாக்கல் செய்த சமூக ஊடக பாதிக்கப்பட்டோர் சட்ட மையத்தின் வழக்கறிஞர் மேத்யூ பெர்க்மேன், இது குறித்து விளக்கமாக கூறுகிறார். "இந்த இரண்டு இளம் பெண்களுக்கு கொடிய உள்ளடக்கத்தை வழங்கிய டிக்டாக், சிறுமிகளின் மரணத்திற்கு பொறுப்பேற்க வேண்டும்" என்பது உயிரிழந்த சிறுமிகளின் பெற்றோரின் கோரிக்கையாக இருக்கிறது. 


"ஆபத்தான உள்ளடக்கத்தைத் தூண்டும் தயாரிப்புகளை வடிவமைக்க பில்லியன் கணக்கான டாலர்களை பைட்டான்ஸ் நிறுவனத்தின் டிக்டாக் முதலீடு செய்துள்ளது. இந்த முதலீடு, டிக்டாக் பயனர்களின் மரணத்திற்கு வழிவகுப்பதாக இருக்கிறது" என்று ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.


ப்ளாக் அவுட் சவாலை முயற்சித்த எட்டு மற்றும் ஒன்பது வயதுடைய சிறுமிகள், சவாலுக்காக கயிறு மற்றும் நாய்ப் பட்டையைப் பயன்படுத்தியுள்ளனர்.


பிளாக்அவுட் சவாலை ஊக்குவிக்கும் டிக்டாக் அதற்காக விபரீதமான வழிமுறையைப் பயன்படுத்துவதாக தங்கள் குழந்தைகளை இழந்த பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இத்தாலி மற்றும் ஆஸ்திரேலியாவில் இதேபோல் சவாலுக்காக உயிரிழந்தவர்களை உதாரணமாக சுட்டிக் காட்டியுள்ளனர்.  


மேலும் படிக்க | விண்வெளியில் அதிகரிக்கும் குப்பை; சீனாவின் 'Sail' குப்பைகளை அகற்றுமா


குழந்தைகளை ஈர்க்கும் டிக்டாக், ஆபத்தான சவால்களை ஊக்குவிப்பதையும் நிறுத்துமாறு நீதிபதி உத்தரவிட வேண்டும் என்று பெற்றோர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.


தங்கள் கோரிக்கைகளுக்கு வலு சேர்க்கும் விதத்தில், "Skull Breaker Challenge", "Coronavirus Challenge" மற்றும் "Fire Challenge" போன்ற தீங்கு விளைவிக்கும் சவால்களின் உதாரணங்களும் இந்த வழக்கில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.


சீனாவை தளமாகக் கொண்ட பைட் டான்ஸுக்குச் சொந்தமான டிக்டாக், சில நேரங்களில் ஆபத்தான விஷயங்களை கருப்பொருளாக கொடுக்கிறது. சவால் விளையாட்டு ஆபத்தானதாக இருந்தாலும், அதில் ஈர்க்கப்படும் நபர்கள், யோசிக்காமல் சவாலே சமாளி என்று களம் இறங்கி உயிர் துறக்கும் சம்பவங்கள் தொடர்கின்றன.


இதுபோன்ற உயிர் காவு வாங்கும் சவால்கள் பலவற்றை டிக்டாக் தொடர்ந்து விளம்பரப்படுத்தி வருவதும் கவலைகளை அதிகரிப்பதாக குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க | கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா: இந்த உணவுகளுக்கு NO சொல்லுங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR