பிரிட்டனில், ஒரு மாத காலம் முன்பாக, போரிஸ் ஜான்சன் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. எனினும், இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 59 சதவிகித வாக்குகளைப் பெற்று போரிஸ் ஜான்சன் தனது பதவியை தக்க வைத்துக்கொண்டார். ஆனாலும்,  தலைமைக்கு எதிராக கட்சிக்குள் எழுந்த எதிர்ப்பு, அவருக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தங்களுக்கு இனி நம்பிக்கை இல்லை என்று கூறி அந்நாட்டின் சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து சாஜித் ஜாவித்தும் நிதியமைச்சர் பதவியில் இருந்து ரிஷி சுனக்கும்  பதவி விலகினர். அவர்களை தொடர்ந்து மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசு பதவியில் இருந்து ராஜினாமா செய்தனர்.


அரசியல் அழுத்தம் காரணமாக பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்தார்.  பிரதமரின்  ராஜினாமாவிற்கு  பிறகு, மேடம் டுசாட்ஸ் நிறுவனம் பிளாக்பூலில் உள்ள மெழுகு அருங்காட்சியகம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அவர் பதவி விலகுவதாக அறிவித்த உடனேயே, அருங்காட்சியகத்தில் இருந்து அவரது மெழுகு சிலையை அருங்காட்சியகம் அகற்றியது. இப்போது அவரது சிலையை மேடம் டுசாட்ஸ் நிறுவனம் லங்காஷயரில் சாலையோரத்தில் வேலை தேடுபவர்களுக்கான வேஎலை வாய்ப்பு மையத்திற்கு வெளியே நிறுவியுள்ளது.