பிரேசில் வெள்ளிக்கிழமை 1 மில்லியன் கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியது மற்றும் 50,000 இறப்புகளை கண்டுள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் பிரேசில் உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போதைய நிலவரப்படி அந்நாட்டில் 10 லட்சத்து 38 ஆயிரத்து 568 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் 55 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று மட்டும் 1,221 பேர் உயிரிழந்துள்ளனர். 


 


READ | நாடு முழுவதும் COVID-19 பரிசோதனைக்கு ஒரே விலையை நிர்ணயிக்க வேண்டும்!!


 


கடந்த இரண்டு மாதங்களில் உலகில் 6 மில்லியன் கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், முதல் இரண்டு மாதங்களில் 85,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் WHO தலைவர் தெரிவித்தார்.


பிரேசில்லில் வழக்குகளின் எண்ணிக்கை அமெரிக்காவை விட அதிகமாக இருக்கும் என்றும், விரைவில் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நாடாக மாறும் என்றும் பல நிபுணர்கள் நம்புகின்றனர்.


இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 87 லட்சத்து 50 ஆயிரத்து 882 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 36 லட்சத்து 68 ஆயிரத்து 686 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில், அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் பிரேசில் உள்ளது. 


 


READ | எச்சரிக்கை: கொரோனாவை காட்டிலும் கொடிய வைரஸ் மீன்கள் மூலம் பரவ வாய்ப்பு!


 


பிரேசில்லில் 10 லட்சத்து 38 ஆயிரத்து 568 பேருக்கு கொரோனாபரவியுள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று மட்டும் 1,221 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பிரேசிலில் பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.